Home » ஒரே திட்டத்தின் கீழ் அடுத்த 05 வருடங்களில் வடமாகாணத்தில் முழுமையான அபிவிருத்தி

ஒரே திட்டத்தின் கீழ் அடுத்த 05 வருடங்களில் வடமாகாணத்தில் முழுமையான அபிவிருத்தி

by Damith Pushpika
January 7, 2024 6:50 am 0 comment
  • மேல் மாகாணத்தை போன்றே ஏனைய மாகாணங்களின் பங்களிப்புடன் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்வோம்
  • கொழும்பு, கண்டி, வடக்கு நாட்டின் மூன்று பிரதான கல்வி கேந்திர நிலையங்களாக உருவாக்கப்படும்
  • விவசாய கல்விக்காக நாட்டை தயார்படுத்தும் வேளை, வடமாகாண விவசாயிகள் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளோம்
  • வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

ஒரே திட்டத்தின் கீழ் அடுத்த 05 வருடங்களில் வடமாகாணம் முழுமையான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

யாழ். மாவட்ட சர்வமதத் தலைவர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று சந்தித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது சிவசேனை அமைப்பின் தலைவரும் எழுத்தாளருமான மறவன் புலவு சச்சிதானந்தன், ஜனாதிபதியுடன் உரையாடும் போது பிடிக்கப்பட்ட படம். சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் எம்.பி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

யாழ். மாவட்ட சர்வமதத் தலைவர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று சந்தித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது சிவசேனை அமைப்பின் தலைவரும் எழுத்தாளருமான மறவன் புலவு சச்சிதானந்தன், ஜனாதிபதியுடன் உரையாடும் போது பிடிக்கப்பட்ட படம். சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் எம்.பி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு 50 வீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் மேல் மாகாணம், நாட்டு பொருளாதாரத்தின் இயந்திரமாக இயங்குகிறதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களையும் அதனுடன் இணைத்துக்கொண்டு 05 பிரதான இயந்திரங்களுடன் இந்நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வவுனியா மாவட்ட கலாசார மண்டபத்தில் நேற்று முன்தினம் (05) நடைபெற்ற வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் கல்வி, சுகாதாரம், மீள்குடியமர்த்தல், காணி, மின்சாரம், குடிநீர், சுற்றுலாத்துறை, வனவள பாதுகாப்பு, கடற்றொழில் துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதோடு, சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஜனாதிபதி அவ்விடத்திலேயே அறிவித்தார்.

கொழும்பு, கண்டி, வடக்கு இந்நாட்டின் மூன்று பிரதான கல்வி கேந்திர நிலையங்களாக உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு 50% பங்களிப்பு மேல் மாகாணத்திலிருந்தே பெறப்படுகிறது.

மற்றைய மாகாணங்களிலிருந்து கிடைக்கும் பொருளாதார பங்களிப்பு மந்தமான நிலையிலேயே உள்ளது. நாடு என்ற வகையில் முன்னேறிச் செல்வதற்கு மற்றைய மாகாணங்களின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டும். அதற்காக சில மாகாணங்கள் அறியப்பட்டுள்ளன.

வடக்கு,மேற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கு பெருமளவான பங்களிப்பை வழங்கும் மாகாணங்களாக மேம்படுத்தப்பட வேண்டும்.

தற்போது நிதி பலமும் இருப்பதால் இடைநிறுப்பட்ட வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும்.

அதேபோல் வெளிநாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தொடர்வதற்கான உதவிகளும் கிடைக்கப்பெறவுள்ளன.

வடமாகாணத்திடமிருந்து நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

வடமாகாணத்திலிருந்து காற்று மற்றும் வெப்பநிலை காரணமாக மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தயாரிப்புக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

வடமாகாணத்தில் தயாரிக்கூடிய மின்சாரத்தின் அளவை கணக்கிட்டு பார்க்கும் போது எஞ்சிய தொகையை இந்தியாவுக்கு விற்பனை செய்து பணம் பெறக்கூடிய நிலையும் உள்ளது.

அதற்கான பேச்சுவார்தைகள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division