மின்னல் வேகத்தில் செல்லல் என்று ஒரு கூற்று ஒன்றுண்டு. அதாவது மிக வேகமாக செல்வதையே குறிப்பிடலாம். கடந்த ஆண்டு BMICH இல் நடந்த கைத்தொழில் கண்காட்சியில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல மின்சார வாகனங்களை காணக்கூடியதாக இருந்தது. இந்த மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கிடையே ஒரு பிராண்ட் மோட்டார் சைக்கிள் வேறுபட்ட அம்சங்களை கொண்டிருப்பதை நாங்கள் கவனித்தோம். பொதுவாக மின்சாரத்தால் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி மூலம் இயங்கும் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளில், சாகசம் செய்ய முடியாது என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் BMICH கைத்தொழிற்துறை கண்காட்சியில் நாம் பார்த்த மின்சார மோட்டார் சைக்கிள் (ஸ்டண்ட் செய்து) தனிச் சக்கரத்தால் இயக்கிக் காட்டப்பட்டது ஒரு நம்பமுடியாத சாதனையாக இருந்தது. கடந்த டிசம்பர் 21 முதல் 30 வரை காலி சமனல விளையாட்டரங்கில் நடைபெற்ற கைத்தொழில் அமைச்சின் ‘இண்டஸ்ட்ரி கோல்’ கண்காட்சியில் இந்த மின்சார மோட்டார் சைக்கிள் சாதனை புரிவதை கண்டோம். இந்த மின்சார மோட்டார் சைக்கிளை தயாரித்தது கே. டி. ரைஸ் எலக்ட்ரிக்கல் மோட்டார்ஸ் பிரைவேட் நிறுவனமாகும். இதன் தலைவர் தம்மிக்க பெரேரா.
இந்த வர்த்தகத்தை 2021 இல் தொடங்கியபோது, நாட்டில் அந்நிய செலாவணிக்கு கடுமையான பற்றாக்குறை காணப்பட்டது. நான் நீர்கொழும்பில் பிறந்தேன். ஐரோப்பாவில் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். தற்போது நான் இத்தாலியில் வசிக்கிறேன். எனது தாய்நாட்டுக்கு சேவை செய்ய இலங்கையில் மின்சார மோட்டார் சைக்கிள் வியாபாரத்தை ஆரம்பிக்க பெரும் தொகையை முதலீடு செய்துள்ளேன்.
இலங்கையில் Made In Sri Lanka மின்சார மோட்டார் சைக்கிள்களை உள்நாட்டு சந்தை மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்து இலங்கைக்கு பாரிய அந்நிய செலாவணியை கொண்டு வர முடியும் என தம்மிக்க கூறுகிறார். தம்மிக்காவின் கூற்றுப்படி, ஐரோப்பிய பைக் சந்தையைக் கைப்பற்றிய அவருக்கு இலங்கை சந்தை மிகவும் சிறியதாக இருப்பதைக் கண்டோம். தம்மிக்க இலங்கையில் மின்சார மோட்டார் சைக்கிள்களை மட்டும் உற்பத்தி செய்யவில்லை. அவர் வித்தியாசமான பைக்கையும் தயாரிக்கிறார். பேருந்தில் கூட -பைக்கை மடித்து எடுத்துச் செல்ல முடியும் என்பது இதன் சிறப்பு. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இந்த -பைக் ஐரோப்பிய சந்தையில் முக்கியமாக இத்தாலி, ஜெர்மனி, ருமேனியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
“இப்போது, முழு ஐரோப்பாவும் electric vehicle கருத்தை நோக்கி நகர்கிறது. தற்போது பெட்ரோல் மாஃபியாவை உலகமே நிராகரிக்கிறது. பல ஐரோப்பிய நாடுகள் 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல் பயன்பாட்டை படிப்படியாக நிறுத்த முடிவு செய்துள்ளன. இந்த ஸ்மார்ட் வாகனங்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விரிவான புரிதல் வழங்கப்பட வேண்டும். இலங்கையில் முதல் ‘எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்’ தொழிற்சாலையில் பெரும் தொகையை முதலீடு செய்தேன். ஆனால், நாட்டுக்காகச் செய்த முதலீடு சரியாக மதிப்பிடப்படவில்லை என்ற பெரும் சோகம் என் இதயத்தில் உள்ளது. நாங்கள் அரசிடம் எந்த நிதி உதவியும் கேட்கவில்லை. இந்த -பைக் பற்றிய கருத்தை உருவாக்க எங்களுக்கு அரசாங்கத்தின் சட்ட ஆதரவு தேவை.” அரசாங்க ஆதரவு கிடைத்தால் 70% க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்களை 5 வருடங்களுக்குள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும் என்று தம்மிகா கூறுகிறார்.
தம்மிக்க பெரேராவின் கூற்றுப்படி, தற்போது இலங்கையின் கே. டி. ரைஸ் எலக்ட்ரிக் மோட்டார் நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் உள்நாட்டில் மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளன. தற்போது 25 வீதமாக உள்ள உள்ளூர் உதிரிபாக உற்பத்தி வீதத்தை அதிகரிக்க அரசாங்கம் தலையிட்டால் அல்லது உள்ளுர் உதிரிபாக உற்பத்தி வீதத்தை 70 வீதமாக உயர்த்தினால் 5 வருடங்களுக்குள் மோட்டார் சைக்கிள்களை முற்றாக உற்பத்தி செய்ய முடியும் என தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். மின்சார இரு சக்கர வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அமைச்சரவையில் முன்வைத்த பிரேரணையின் நடைமுறைச் செயற்பாடே இது எனவும் தம்மிக்க பெரேரா மேலும் தெரிவித்தார்.
இந்த கே.டி. ரைஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட லீடர் -ஸ்கூட்டர் இலங்கை வாகன வரலாற்றில் தனித்துவமான வாகனமாகும் KA எனும் செஸி இலக்கத்துடன் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட முதலாவது மின்சார ஸ்கூட்டர் இது என கைத்தொழில் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளம் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையில் மின்சார வாகனங்களின் முக்கிய பிரச்சினை அதன் மின்கலமாகும். ஒரு நிறுவனம் மின்சார வாகனங்கள் அல்லது -எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை கொண்டு வந்து அவை விற்று தீர்ந்தவுடன் காணாமல் போவது அடிக்கடி நடக்கும் சம்பவமாகும். கடைசியில், எலக்ட்ரிக் வாகனங்கள் அல்லது மோட்டார் சைக்கிள்களை வாங்கிய வாடிக்கையாளர்கள், சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளைத் தேடி, அதனை அறிமுகப்படுத்திய நிறுவனத்தை பல மாதங்களாகத் திட்டி, மனம் தளரும்போது, ’யாரும் எலெக்ட்ரிக் பைக்கை வாங்காதீர்கள்’ என்றே ஆலோசனை வழங்கப்படும்.
“நாங்கள் இந்த மின்சார பைக்குகளை இலங்கையில் மிக உயர்ந்த தரத்தில் தயாரிக்கிறோம் மற்றும் பேட்டரி குறித்து சிறப்பு கவனம் செலுத்துகிறோம். பேட்டரி மின்சார பைக்கின் இதயம் போன்றது. நாங்கள் லித்தியம் அயன் பொஸ்பேட் பேட்டரிகளைப் பயன்படுத்துகிறோம். இது பாரம்பரிய லித்தியம் அயன் பேட்டரி போன்றதல்ல. நாம் பயன்படுத்தும் பேட்டரி நீண்ட ஆயுள் கொண்டது. அந்த பேட்டரிகளை பயன்படுத்திய பின்னர் மீளவும் சார்ஜ் செய்வதை எங்கள் முக்கிய பொறுப்பாக நாங்கள் கருதுகிறோம். “இலங்கையின் மின்சார வாகனங்களுக்கு ஜப்பான் போன்ற நாடுகள் பேட்டரிகளை வழங்காததற்குக் காரணம், இலங்கையில் முறையான மீள்சுழற்சி திட்டம் இல்லாததாலா?” என தம்மிகாவிடம் கேட்டேன்.
“அதனால் தான் எமது நிறுவனம் இந்த மின்சார மோட்டார் சைக்கிள்களில் இருந்து அகற்றப்பட்ட பேட்டரிகளை மீள்சுழற்சி செய்வதற்கான முறையான திட்டத்தை செயல்படுத்துகிறது என்று நான் சொல்கிறேன்.” என தம்மிக்க கூறினார்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இந்த மின்சார மோட்டர் சைக்கிள் தயாரிப்பு முதலீட்டுச் சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், ISO 9001/ 2015 தரச் சான்றிதழுடன் CE சான்றிதழையும் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பிரபலமான EV concept அல்லது Electrical Vehicle கருதுகோளின் படி இலங்கையில் தயாரிக்கப்படும் மின்சார கார் தான் தனது அடுத்த இலக்கு என்று தம்மிக தனது எதிர்கால இலக்குகள் குறித்து குறிப்பிட்டார். கடந்த வருட அமைச்சரவை முடிவு அறிவிப்பில், மின்சார கார்களுக்கு இதுபோன்ற அமைச்சரவை முடிவு அறிவிக்கப்பட்டது. “தற்போதுள்ள முதலீட்டுச் சபை மறு முதலீட்டிற்கான முதலீட்டாளர்களை தக்கவைத்தல் மற்றும் விரிவாக்கத் திட்டம்” மற்றும் “முதலீட்டு சபையின் 100 தகவல் தொழில்நுட்ப அதிகாரம் பெற்ற தகவல் சேவை நிறுவனங்களின் திட்டம்” ஆகியவற்றின் கீழ் முதலீட்டை ஈர்ப்பதற்கான தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யும் திட்டங்களுக்கு, காப்புறுதியும் கப்பல் கட்டணப் பெறுமதியும் 30,000 அமெரிக்க டொலர்களுக்கு மேற்படாத ரீசார்ஜ் செய்யக்கூடிய மின்சார வாகனங்களை சுங்க வரியில்லா அடிப்படையில் கப்பல் கட்டணத்துடன் இறக்குமதி செய்வதற்கு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. .
“தற்போது இறக்குமதி செய்யப்போகும் இந்த மின்சார வாகனத்தை இலங்கையில் தயாரிக்க முடியாது என்கிறீர்களா?”
“அரசாங்க ஆதரவு கிடைத்தால் அந்த மின்சார வாகனத்தை இலங்கையில் தயாரிக்கலாம். எவ்வாறாயினும் , இத்தாலியில் ஐரோப்பாவிற்கான மின்சார வாகனம் தயாரிக்க நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டுள்ளோம். இலங்கையில் தயாரிக்கப்பட்டால், அந்த மின்சார வாகனத்தை 25,000 டொலர்களுக்கும் குறைவான விலையில் தயாரிக்க முடியும்.
முழுமையாக பொருத்தப்பட்ட மின்சார மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதே தனக்கு முக்கிய அச்சுறுத்தலாக இருப்பதாக தம்மிக்க கூறுகிறார். அரசாங்கத்தின் தலையீட்டின் ஊடாக இந்த உள்ளூர் மோட்டார் சைக்கிள்களின் உற்பத்திக்குத் தேவையான இறக்குமதி மூலப்பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளை குறைப்பதே அரசாங்கம் செய்ய வேண்டியது என தம்மிக்க கூறுகிறார். ஒவ்வொரு மாதமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு போதுமான திறன் தனது தொழிற்சாலைக்கு இருப்பதாக தம்மிக கூறுகிறார். முழுமையான மின்சார மோட்டார் சைக்கிள்களை ‘இறக்குமதி’ செய்ய அனுமதிப்பது ஏற்கனவே உள்நாட்டில் மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு ‘மரண அடி’ கொடுப்பது போன்றது என்பது தம்மிக்காவின் கருத்து. அவரது அடுத்த திட்டம் இந்த மின்சார கார்களுக்கு பேட்டரியை தயாரிப்பதாகும். உலகிலேயே சிறந்த கிராஃபைட் இலங்கையில் உள்ளது. இது முழு உலகத்திற்கும் பேட்டரிகளை தயாரித்து இலங்கையில் உள்ள அனைத்து டொலர் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்.
தற்போது உள்நாட்டு மோட்டார் சைக்கிள் பொருத்தும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால் என்னவென்றால், ‘ரெடிமேட் இறக்குமதி செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு’ வரி மிகவும் குறைவாக உள்ளது. உள்ளூர் மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்கள் தற்போது இலங்கையில் பெரும்பாலான உதிரிபாகங்களை உற்பத்தி செய்து ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகின்றனர். சில அத்தியாவசிய உதிரி பாகங்களை மட்டுமே இறக்குமதி செய்கின்றனர். இந்த உதிரிப் பாகங்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரி மிக அதிகமாக இருப்பதுதான் நெருக்கடி. ஆனால் இறக்குமதி செய்யப்பட்ட ரெடிமேட் மோட்டார் சைக்கிள்களுக்கு விதிக்கப்படும் வரி மிகக் குறைந்த அளவில் இருப்பது உள்ளூர் மோட்டார் சைக்கிள் தொழிலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதி முடிவு என்னவென்றால், உள்நாட்டில் பொருத்தப்படும் மோட்டார் சைக்கிளின் விலை, தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிளின் விற்பனை விலையை விட அதிகமாகும்.
ஆனால் இந்த இறக்குமதி மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு இலங்கையில் தர பரிசோதனை எதுவும் செய்யப்படுவதில்லை என்பதோடு, பேட்டரிக்கும் எவ்வித உத்தரவாதமும் இல்லை. முழுமையான இறக்குமதி செய்யப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் விரைவில் மூடப்படுவதால், அவற்றை வாங்கிய வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்த உள்நாட்டில் பொருத்தப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு உத்தரவாத காலம் உள்ளது. அவர்களிடம் ஏராளமான உதிரி பாகங்கள் உள்ளன.
இந்த மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு நிதி வசதி செய்து தருவதில் தயக்கம் ஏன் என பலரும் கேட்கின்றனர்.
இந்த மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு தவணைக் கட்டணத்தை எவ்வாறு திரும்பப் பெறுவது என்று ஒரு நிதி நிறுவனம் கேட்டது. பைக்கின் முழு விலையையும் பேட்டரி மற்றும் முழு மின்சார மோட்டார் சைக்கிளுக்கும் தருகிறேன் என்றேன். இது கே.டி. ரைஸ் உள்ளூர் மின்சார மோட்டார் சைக்கிள் தொழிற்சாலை 300 க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. தனது வாழ்நாளின் பெரும்பகுதியை ஐரோப்பிய நாட்டில் வாழ்ந்ததாக தம்மிக்க கூறுகிறார்.
தமிழில் வீ.ஆர்.வயலட் புகைப்படங்கள் - துஷ்மந்த மாயாதுன்ன