ஐக்கிய நாடுகள் சூழல் நிகழ்ச்சித் திட்டத்துடன் 2019 ஒக்டோபர் மாதம் இலங்கை ஏற்படுத்திக் கொண்ட பங்காண்மையின் பிரகாரம், வாழ்க்கைக்கான நைதரசன் எனும் கொழும்பு பிரகடனத்தை பின்பற்ற ஆரம்பித்தது.
2030ஆம் ஆண்டளவில் நைதரசன் கழிவை அரை மடங்காக குறைக்கும் வழிமுறையை 15 அங்கத்துவ நாடுகள் பின்பற்றுவது தொடர்பில் இந்த பங்காண்மையில் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐந்தாவது ஐக்கிய நாடுகள் சூழல் ஒன்றுகூடலில், புவியில் நிலைபேறான வகையில் நைதரசன் பயன்பாட்டை மேற்கொள்வது தொடர்பான “நிலைபேறான நைதரசன் முகாமைத்துவத்துக்கான உறுதிமொழி” எனும் சர்வதேச நைதரசன் நிர்வாக கட்டமைப்பு (INMS) இன் ஆதரவுடன் இலங்கை இந்த நிலைப்பாட்டை மேலும் உறுதி செய்திருந்தது.
உலகளாவிய பொருளாதார ரீதியில் நைதரசன் பாவனை என்பது சிக்கனமற்றதாக அமைந்துள்ளது. பெருமளவான பகுதி சூழலில் வெளியிடப்படுகின்றது.
தற்போதைய தவறான முகாமைத்துவம் மற்றும் அளவுக்கதிகமாக நைதரசன் பயன்பாடு ஆகியன பூமி, நீர், உயிரியல் பரம்பல், மனித சுகாதாரம் மற்றும் வளி ஆகியவற்றில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன், மோசமான காலநிலை மாற்றங்களையும் தோற்றுவிக்கும்.