பேட்டரி தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் லீடர் குழுமம், நேஷனல் இன்டஸ்ட்ரி எக்ஸலன்ஸ் அவார்ட்ஸ் 2023 மற்றும் தெற்காசிய பிசினஸ் எக்ஸலன்ஸ் விருதுகள் 2023 ஆகியவற்றில் வென்ற அதன் சமீபத்திய விருதுகளுடன் தொழில்துறையில் புதிய வரையறைகளை அமைத்துள்ளது. நிறுவனம் தேசிய தொழில்துறை சிறப்பு விருதுகளில் நடுத்தர பிரிவில் தங்க விருது மற்றும் தெற்காசிய வணிக சிறப்பு விருதுகளில் பெரிய பிரிவில் ஆண்டின் சிறந்த உற்பத்தியாளர் என்ற பட்டத்தை வென்றது.
இந்தச் சாதனையைப் பற்றிப் பேசிய லீடர் கைஜி பேட்டரி பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் துஷாந்தி குரே, நிறுவனத்தின் பயணத்தையும் புதுமை மற்றும் தொழில்நுட்பத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் எடுத்துரைத்தார். “எங்களுக்கு முன்னால் ஒரு சவாலான, ஆனால் வெற்றிகரமான பயணம் உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் மிகுந்த ஆர்வத்துடன் பேட்டரி உற்பத்தியின் முக்கிய சவால்களைச் சமாளிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.”
அதன் சிறப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய தொழில்துறை சிறப்பு விருதுகளில் தங்க விருதையும் வென்றது. ‘லீடர் குழுமம்’ பிரதம நிறைவேற்று அதிகாரி மிதுல ரத்நாயக்க நன்றி தெரிவித்தார்: “தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்க விருதை வென்றது எங்களுக்கு ஒரு தனித்துவமான சாதனையாகும். இது எங்கள் ஊழியர்களின் அயராத உழைப்பையும் அவர்களின் சிறந்த அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பேட்டரி துறையில் எங்கள் உறுதிப்பாட்டை இந்த விருது வலுப்படுத்துகிறது.