சியெட் களனி ஹோல்டிங்ஸ், அதன் விநியோகச் சங்கிலியின் முக்கிய அங்கமான இறப்பர் விவசாயிகளின் குழந்தைகளின் கல்வியை ஆதரிப்பதற்காக ஒரு புதிய சமூகத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
10,000 விவசாயக் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து 100 சதவீத இயற்கை இறப்பர் தேவைகளைக் கொண்ட இலங்கையின் நியூமேடிக் டயர் தேவைகளில் பாதியை உற்பத்தி செய்யும் சியெட், இறப்பர் வளரும் பகுதிகளில் பாடசாலை புத்தகப் பைகள், எழுதுபொருட்கள் மற்றும் கல்வித் தேவைககளுக்கான பிற பொருட்களையும் விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.
மத்துகம கல்வி வலயத்தை மையமாகக் கொண்ட இந்த திட்டத்தின் முதல் கட்டமான நல்ல குடியுரிமை முன்முயற்சிகளின் ‘சியட் கேர்ஸ்’ போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியானது, சியெட் டயர்களை அதிகம் பயன்படுத்தும் இலங்கை இராணுவத்தின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் பல்லேகொடவில் அமைந்துள்ள பல்லேகொட தமிழ் பாடசாலை மற்றும் இட்டப்பனவிலுள்ள மிரிஸ்வத்த தமிழ் பாடசாலை ஆகிய இரண்டு பாடசாலைகளும் முதலாவதாக பயனடைந்துள்ளன.
இந்த பாடசாலைகளை அண்மையில் சியெட் மற்றும் இலங்கை இராணுவத்தின் பிரதிநிதிகளால் பார்வையிடப்பட்டதுடன் 119 குழந்தைகளுக்கு பாடசாலை பைகள், காலணிகள் மற்றும் எழுதுபொருட்கள் போன்றவற்றுடன் சத்தான மதிய உணவும் வழங்கப்பட்டது.