இலங்கையின் முதற்தர வங்கியான வங்கி ஐக்கிய இராச்சியத்தின் புகழ்பெற்ற சஞ்சிகையான த பாங்கர் சஞ்சிகையால் வழங்கப்பட்ட ‘இவ்வாண்டுக்கான இலங்கையின் வங்கி’ என்ற உயரிய அங்கீகாரத்துடன் 2024ஆம் புத்தாண்டை ஆரம்பித்துள்ளது.இவ்வாண்டின் முதல் வேலை நாளான ஜனவரி 1ஆம் தின வைபவம் வங்கியின் தலைமை அலுவலகத்தில் பதில் தலைவர் நரேஷ் அபேசேகர மற்றும் பொது முகாமையாளர். ரசல் பொன்சேகா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பெருநிறுவன மற்றும் நிறைவேற்று முகாமைத்துவ உறுப்பினர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கியின் நலன் விரும்பிகள் எனப் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
வங்கியின் அனைத்து பங்குதாரர்களுக்கும் ஆசி வேண்டி சர்வ மதப் பிரார்த்தனைகளுடன் இந்நிகழ்வு தொடங்கியது.
இத்தருணத்தில் வங்கியின் பொது முகாமையாளர் ரசன் பொன்சேகா மற்றும் பிரதம நிதி அதிகாரி எம்.பி.ருவான்குமார ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தின் த பாங்கர் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட இவ்வாண்டுக்கான இலங்கையின் வங்கி’ என்ற வெற்றிச் சின்னத்தை இலங்கை வங்கியின் பதில் தலைவர் நரேஷ் அபேசேகரவிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தனர்.
குழந்தைகளுக்கான எதிர்கால முதலீடுகளைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தும் வங்கியின் புதிய ஸ்மாட் தயாரிப்பான ‘ரண் கெகுளு ஸ்மாட் இன்வெஸ்ட்மென்ட்’ கணக்கும் இந்நிகழ்வில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.