66
கொஞ்சக் காலமாக
வந்து போகும் மிந்தப்
புத்தாண்டுகள் எல்லாம்
உலகை ஆட்சியாளர்கள்
போலும், அரசியல்
வாதிகள் போலுந்தான்
வந்திருந்து போகின்றன
நலவொன்றும் நாம் காணோம்!
எவன் செத்தால் என்ன
எவன் வாழ்ந்தால் என்ன
அப்பாவி மக்களின் அடி
வயிற்றிலே அடித்து
அவரவரின்
பொருளாதாரங்களைக்
கொள்ளையடித்துக் களவாடி
மெல்ல நகர்ந்து போகிறது!
இந்த வருஷமாவது
சுயநலம் இல்லாத தாய்
மக்கள் நலமுள்ள தாய்
அனைவருக்கும் நல்ல தாய்
உள்ளன்பு கொண்ட தாய்
அகிம்சை மனமுள்ள தாய்
அன்பிற்கு இனிய தாய்
வந்து பிறக்கட்டும் புத்தாண்டும்!
பாண்டியூர் பொன்பாவேந்தன்