தை தொடக்கம் மார்கழி வரை
தொடரும் உன்ஆயுள் இறுதியில் மடிவு
தைரியமாக மற்றொரு ஆண்டு பிறக்கும்
பிறந்து மடிந்து சரித்திரம் படைப்பது
தையலே உங்களுக்கு வழக்கமாச்சு
பாவையே இரண்டாயிரத்து இருபத்து நான்கே
பட்டாடை கட்டி பூ மலை சூடி
தங்கச் சிலையென இளநகை ததும்ப
புதுமை கொண்டு புத்தாண்டே வருக!
உலகமெங்கும் போர் முழக்கம் ஓயட்டும்
சிந்தும் செங்குருதியில் தோய்ந்த நிலமகள்
உயிரற்ற சடலங்களை சுமந்து கிடக்கிறாள்
அவள் விழி சிந்தும் நீர் ஆறாய் ஓடுகிறது
உறங்கிய கடலும் கருணையின்றி சீறிப்பாய்கிறது
ஆண்டவனே நீதான் இந்த
உலகை காக்கவேண்டும்
உள்ளத்தில் உவகை பொங்கிடவேண்டும்
உத்தமியே இனிய புத்தாண்டே வருக!
ஏறிய பொருள் விலை இறங்கிடவேண்டும்
மக்கள் உள்ளத்தில் உவகை பொங்கட்டும்
எண்ணங்கள் ஆயிரம் மனிதனுக்கு
அத்தனையும் நனவாய் மலர்ந்திடவேண்டும்
எங்கும் மங்கலம் பொங்கட்டும் உலகில்
வறுமையகன்று நிம்மதி நிலைக்கட்டும்
எங்கள் வாழ்வில் நல்லெழில் தோன்றி
வையகம் மகிழ்ந்து ஆனந்தம் மேலிட