முழுமையாக வற்றிப்போயிருந்த நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் 3.6 டொலர் பில்லியனாக உயர்த்த முடிந்ததென, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
பிரசித்தமான தீர்மானங்களை மக்கள் விரும்புவதாலேயே அரசியல்வாதிகளும் பிரசித்தமான தீர்மானங்களை செயற்படுத்த விரும்புகின்றனர். அவ்வாறான அனைத்து தருணங்களிலும் ஒரு நாடாக சரிவை சந்திக்க நேரிட்டதாகவும், அவர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று முன்தினம் (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், “மக்கள் எப்போதும் பிரசித்தமான தீர்மானங்களை விரும்புகிறார்கள். அதனால் அரசியல்வாதிகளிடமிருந்து பிரசித்தமான தீர்மானங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் பிரபலமான தீர்மானங்களை நோக்கிச் செல்லும் போது, நாம் அவற்றில் சிக்கிக்கொள்ள வேண்டாமென்று மக்களுக்கு கூறினோம். ஆனால், மக்கள் பிரபலமான தீர்மானங்களையே எடுத்தார்கள். ஒவ்வொரு முறையும் பிரபலமான முடிவுகள் எடுக்கப்பட்ட போது, ஒரு நாடாக நாம் தோல்வியடைந்துள்ளோம். இதிலிருந்து எதிர்க்கட்சிகள் கூட தப்ப முடியாது. அவர்களும் நாட்டின் அபிவிருத்திக்காக முடிவுகளை எடுக்கும் போதுஅவற்றை எதிர்த்ததும் பிரபலமான தீர்மானம் என்பதாலேயே. மேலும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அவற்றை எதிர்த்தனர். இறுதியில் எமது நாடு ஒரு மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.
நாடு எதிர்கொண்ட நெருக்கடியின் போது, இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாதென்பதை அவர்கள் புரிந்து கொண்டதாலேயே இந்தப் பொறுப்பை ஏற்க முடியாதெனப் பின்வாங்கினர். அவர்களை போலவே ஜனாதிபதியும் நாமும் இந்தப் பொறுப்பை மறுத்திருந்தால் எதிர்க்கட்சியினரின் பேரணிகளுக்கு பஸ்களில் கூட மக்கள் வந்திருக்கமாட்டார்கள்.
இப்போது எம் மீது குற்றம் சாட்டும் சிலருக்கு நாம் அப்போது எதிர்க்கட்சியில் இருந்தமை நினைவில்லை. அவர்கள் அரசாங்கத்தில் இருந்தார்கள். எதிர்க்கட்சியிலிருந்து வந்தே இதனை செய்தோம். ஒரு டொலர் கூட இல்லாத நிலையிலேயே நாம் இந்த நாட்டை பொறுப்பேற்றோம். மத்திய வங்கியின் டொலர் எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் எமது புலம்பெயர் தொழிலாளர்களின் கைகளில் இருந்தன. அவ்வாறு இருந்த மத்திய வங்கியின் டொலர் கையிருப்பு இன்று 3.6 பில்லியன் டொலர்வரை அதிகரித்துள்ளது. நாம் ஆட்சிக்கு வராவிட்டால், இந்நாட்டில் டொலர் இல்லாமல், எதையும் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். நாம் ஆட்சிக்கு வருகின்ற காலத்தில் அப்போது நினைத்தவாறு பணம் அச்சிடப்பட்டது. அதன் காரணமாக பணவீக்கம் அதிகரித்தது ப்ப முடியாத நிலை தோன்றியிருக்கும்” என்றார்.