இலங்கையின் முதன்மையான உள்நாட்டில் தயாரிக்கபடும் ஆண்களுக்கான பிரசித்தி பெற்ற வர்த்தக நாமமான சிக்னேச்சர், அண்மையில் தனது ‘சிக்னேச்சர் டீலர் கன்வென்ஷன் 2023’ ஐ Galle Face Hotel இல் நடத்தியது. இந்த மாநாடு அதன் டீலர்களுடனான நீடித்த வணிக கூட்டாண்மைக்கு இதயபூர்வமான நன்றியைத் தெரிவிப்பதாக அமைந்திருந்தது. சிக்னேச்சரின் அண்மைய சேகரிப்புகள் மற்றும் இலங்கையின் முதல் மொத்த விற்பனை செயலியின் அறிமுகம், வர்த்தக நாமத்தின் நம்பகமான டீலர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் ஒரு அற்புதமான நடவடிக்கையாக அமைந்திருந்தது.
மாலையில் பிரதம விருந்தினராக ட்ரீம்ரான் குழும நிறுவனங்களின் குழும முகாமைத்துவ பணிப்பாளர்/தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கிஷு கோமஸ் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் ஹமீடியா குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பௌசுல் ஹமீட், ஹமீடியா குழுமத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் ஹுசைன் சாதிக் மற்றும் சிக்னேச்சர் மற்றும் ஹமீடியா ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
இலங்கை முழுவதும் பரவியுள்ள 300 விநியோகஸ்தர்களின் வலையமைப்பிலிருந்து, 90 பேர் கெளரவிப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர், மேலும் சிறந்த 25 பேர் அவர்களின் சிறப்பான செயல்திறன் மற்றும் சிக்னேச்சருடனான நீடித்த கூட்டாண்மைக்காக விருதுகளைப் பெற்றனர். கேகாலை நியூ ஸ்ரீயானி டிரஸ் பொயிண்ட், கிரிபத்கொட, திலகவர்தன டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட், கடவத்தையின் கண்டி, காலியின் ஹேமாரா ரிச் லுக் மற்றும் பிலியந்தலையின் பிரசாத் டெக்ஸ்டைல்ஸ் ஆகியன சிறந்தவையாகக் கெளரவிக்கப்பட்ட 5 டீலர்களில் அடங்கும்.