இலங்கையின் புகழ்பெற்ற வர்த்தக நிறுவனமான Lanka Spice (Pvt) Ltd, ‘Senehase Dath’ (அன்பின் கரங்கள்) எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் சமூகப் பொறுப்புணர்வை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க படியை எடுத்துள்ளது. கல்வியை ஆதரிப்பதில் விசேட கவனம் செலுத்தி, சமூகத்திற்கு அர்த்தமுள்ள வழிகளில் மீளக் கொடுப்பதில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்த திட்டம் பிரதிபலிக்கிறது.
‘Senehase Dath’ நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வானது, அண்மையில் அத்துருகிரிய, மே.மா /ஜயா / மகாமத்திய வித்தியாலயத்தில் இடம்பெற்றது. Mc Currie நிர்வாகம், பாடசாலை நிர்வாகத்துடன் இணைந்து, தரம் 6 முதல் 9 வரையிலான தகுதியான மாணவர்கள் குழுவை அடையாளம் கண்டு, இந்த மாணவர்களுக்கு அவர்களின் கற்றல் பயணத்தை எளிதாக்கும் வகையில், அத்தியாவசிய கற்கைக்கான பொருட்கள் அடங்கிய, தொகுக்கப்பட்ட பரிசுப் பொதிகளை வழங்கியது.
Lanka Spice நிறுவனத்தின் இந்த தாராளத் தன்மை கொண்ட செயலுக்கு நன்றி தெரிவித்த, அத்துருகிரிய மகாமத்திய வித்தியாலயத்தின் அதிபர் எச்.ஏ. காமினி ஜயரத்ன, “Lanka Spice நிறுவனத்தின் இந்த ஆற்றல் மிக்க செயலை நான் மிகவும் நன்றியுணர்வோடு பாராட்டுகிறேன். கடுமையான நிதி நிலைமைகளுடன் போராடும் குடும்பங்களைச் சேர்ந்த எமது பாடசாலையைச் சேர்ந்த பல மாணவர்களின் கல்விக்கு இது உறுதுணையாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
எம்மைப் போன்ற பல பாடசாலைகள் மற்றும் சிறுவர்களுக்கு ஆதரவளித்து, இந்த சிறந்த பணியைத் தொடர Lanka Spice நிறுவனத்திற்கு அனைத்து வளமும், தைரியமும் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.” என்றார்.