இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, இந்த பண்டிகைக் காலத்தில், #Happyisnow மூலம் பல தனித்துவமான சலுகைகளை வழங்கி, அதன் கார்ட் உரிமையாளர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
HNB தனது டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் உரிமையாளர்களுக்கு 12 நவம்பர் 2023 முதல் 31 டிசம்பர் 2023 வரை சலுகைகளை வழங்குவதற்காக இலங்கையின் முன்னணி வாடிக்கையாளர் விற்பனை நிலையங்கள், நகைகள் மற்றும் e-Commerce பிராண்டுகள் மற்றும் பிரபலமான உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், ஹோட்டல்கள் மற்றும் பாடசாலை உபகரண விற்பனை நிலையங்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன்படி 75% தள்ளுபடி மற்றும் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் மாதாந்திர தவணை திட்டங்களுடன் கவர்ச்சிகரமான சலுகைகளும் வழங்கப்படும்.
இது குறித்து கருத்து தெரிவித்த HNB கார்ட் பிரிவின் தலைவர் கௌதமி நிரஞ்சன், இந்த கிறிஸ்மஸ் பருவ காலத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மதிப்புமிக்க பரிசாக சிறப்பு கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் சலுகைகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒவ்வொரு விடுமுறையின் ஒவ்வொரு தருணத்தையும் மறக்க முடியாத அனுபவமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த பிரத்தியேக சலுகைகள் மூலம், இந்த ஆண்டும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அற்புதமான பண்டிகை காலத்தை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். ! ” என தெரிவித்தார்.