உலகளாவியரீதியில் முன்னணி தொழில்நுட்ப சக்திக்கான வர்த்தக நாமங்களில் ஒன்றாக விளங்கும் லெனோவோ [Lenovo] இலங்கை பிராந்தியத்தில் நிறுவனத்தின் பிரசன்னத்தை உறுதி செய்வதன் மூலம் குறிப்பிடத்தக்க மைல் கல்லை பதிவு செய்யும் வகையில் மிகச் சிறந்த முதற்தர அனுபவத்தை வழங்கும் விதத்தில் தனித்துவமான நவீன காட்சியறையொன்றினை திறக்கவுள்ளதாக இன்று அறிவித்தது. இந்த அறிவிப்பானது இலங்கையின் டிஜிட்டல் உருமாற்ற செயற்பாடுகளை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான லெனோவோவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. தொழில்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு [AI] தயார் சாதனங்கள், உள்ளகக் கட்டமைப்பு, தீர்வுகள் மற்றும் சேவைகள் மூலம் அறிவார்ந்த மாற்றத்தை ஏற்படுத்த உதவுகின்றன. லெனோவோ தொடர்ச்சியாக மூன்று காலாண்டுகளாக இலங்கையில் முதற்தர கணினி வர்த்தகநாமமாக இருந்து வருகின்றது மேலும் நாட்டில் அதன் சந்தைப் பங்கை தொடர்ந்தும் வளர்த்துக் கொள்ள உறுதி பூண்டுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அனுபவ தனித்துவ நவீன காட்சியறையானது (LES) ஒட்டுமொத்த கொள்முதல் அனுபவத்தை மேம்படுத்துவதாக உறுதியளிக்கிறது, அதன் தனித்துவமான ஒருங்கிணைந்த வடிவமைப்புடன் வாடிக்கையாளர்களை ‘இருக்கவும் விளையாடவும்’ ஊக்குவிக்கிறது.
இப் புதிய காட்சியறையானது பிராந்தியத்திற்கான லெனோவோவின் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். லெனோவோ அடுத்த 2 ஆண்டுகளில் இலங்கையில் இதேபோன்ற மேலும் 10 காட்சியறைகளுடன் தனது தடத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.