67
அடிக்கடி ஞாபகப்படுத்தி
கடந்து செல்ல
மறுக்கிறது
புன்னகையுடனான
கண்ணீர் கலந்த
வறுமை.
பசியோடு பழகி
முதுமையோடு விளையாடி
நினைவோடு உரையாடி
அநாதையெனக் கூறி
யாசகம் கேட்க
தயார் ஆகிறது
கைகளுடன் முதுமை.
அன்பான உறவுகளால்
அழகான வாழ்வினை
பரிசாகத் தந்து
போகிறது துரோகம்
நிறைந்து போன
ஏமாற்றங்கள்.
அளவாய் வைத்திருந்த
பணம் அழகாய்
கூறிப் போகிறது
உன்னை விட
எனக்கு மரியாதை
அதிகமென நான்
ஈன்றெடுத்த மழலையோடு
ஆனந்தமாய்.
மனதோடு பலவாயிரம்
வலிகளிருந்தும்
வறுமையோடும்
தனிமையாக நாட்களைக்
கடந்து போகிறேன்
நாளையொரு நாளிருக்க
கூடாதென்று தினமும்
பிரார்த்தனையுடன்.
–