109
சென்பக பூவின் வாசம் வரும்
அது தென்றலை தாங்கி தூதுவரும்
நெஞ்சினில் எப்போதும்
உன் நினைவு
கவிதைகளாய் மாறி
இன்பம் தரும்
தேன் மொழி பேசும் உன் பேச்சு
பேரானந்தமே என்
வாழ்வில் தரும்
செவ்வரத்தம் பூவின்
வாசம் வரும்
அது எப்போதும் இன்பம் தரும்
என் வாழ்க்கையில்
மாற்றம் வரும்
அது எப்போதுமே ஏற்றம் தரும்
கண்கள் இரண்டிலும்
கண்ணீர் வரும்
அதில் என் கவலைகள் யாவும்
தொலைந்து விடும் …..!!!!!