சீரற்ற காலநிலையால், நாடளாவிய ரீதியில் 02 ஆயிரத்து 271 குடும்பங்களைச் சேர்ந்த 07 ஆயிரத்து 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, வட மாகாணத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில், ஆயிரத்து 371 குடும்பங்களைச் சேர்ந்த 04ஆயிரத்து 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் 892 குடும்பங்களைச் சேர்ந்த 02 ஆயிரத்து 780 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தின் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கே.திலீபன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி, மன்னார், வவுனியா முல்லைத்தீவு நிருபர்கள்