லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டில் 2024 ஆம் ஆண்டுக்கான இஸ்லாமிய நாட்காட்டி வழங்கும் நிகழ்வு புதன்கிழமை லேக்ஹவுஸில் இடம்பெற்றது. இதற்கு அமானா வங்கி மற்றும் தாருல் ஈமான் நிறுவனம் ஆகியன அனுசரணை வழங்கியிருந்தன. குறித்த நிகழ்வில், விடை பெற்றுச் சென்ற மஜ்லிஸ் உறுப்பினர்களான எம்.ஏ. அமீனுல்லா மற்றும் எம்.எம். பிர்தௌஸ் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர் எம்.எஸ். சம்ஸ் பாஹிம் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், செயலாளர் றிஸ்வான் சேகு முகைதீன், பொருளாளர் எம்.என்.ஏ. றிஸ்வான் தலைமையிலான செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மஜ்லிஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து தினகரன் மற்றும் வாரமஞ்சரி ஆசிரியர் தே. செந்தில் வேலவருக்கு, லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் இஸ்லாமிய நாட்காட்டியின் பிரதியொன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற
முஸ்லிம் மஜ்லிஸின் நாட்காட்டி விநியோகமும் விடை பெற்றுச் செல்லும் உறுப்பினர் கௌரவிப்பும்
353
previous post