டேவிட் பீரிஸ் குழும கம்பனிகளின் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனமான அசட்லைன் லான்ட்ஸ் (பிரைவட்) லிமிடட் நிறுவனம் நீர்கொழும்பில் புதிய கிளையைத் திறந்து தனது செயற்பாடுகளை விஸ்தரித்துள்ளது. இந்தப் பிராந்தியத்தில் உள்ள வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய வகையில் நகரின் மையப்பகுதியில் 394, கொழும்பு வீதி, நீர்கொழும்பு என்ற முகவரியில் இந்தக் கிளை அமைந்துள்ளது.
இந்தக் கிளையின் திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில் மாரவிலவில் அமைந்துள்ள ‘த மரைன்’ காணிக் குடியிருப்பு அபிவிருத்தித் திட்டத்தின் வாடிக்கையாளர்கள் தமது காணிகளுக்கான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டனர். இந்த மூலோபாய நகர்வானது நிறுவனத்தின் வளர்ச்சிப் படியை வெளிப்படுத்தியிருப்பது மாத்திரமன்றி வாடிக்கையாளர்களின் சௌகரியம் தொடர்பில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அசட்லைன் லான்ட்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.கலும் கட்டிப்பெராச்சி குறிப்பிடுகையில், “சீதுவவில் முன்னெடுக்கப்படும் எயார் டெரஸ் மற்றும் மாரவிலவில் உள்ள த மரைன், திவுலப்பிட்டியவில் உள்ள கிரீன் சிட்டி மற்றும் மதுரங்குளியில் ஏர்பன் பார்க் போன்ற திட்டங்கள் மூலம் அசட்லைன் லான்ட்ஸ் நிறுவனம் ஆதன அபிவிருத்தித் திட்டத்தில் அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதைப் பறைசாற்றுகிறது” என்றார்.