Home » கூட்டாண்மையை புதுப்பித்துள்ள Coca-Cola மற்றும் Sathosa

கூட்டாண்மையை புதுப்பித்துள்ள Coca-Cola மற்றும் Sathosa

by Damith Pushpika
December 17, 2023 6:38 am 0 comment

இலங்கை முழுவதும் Coca-Cola தயாரிப்புகளின் கிடைக்கும் தன்மை மற்றும் அணுமுறையை மேம்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, Coca-Cola Beverages Sri Lanka (CCCBSL) மற்றும் Lanka Sathosa Limited ஆகியவை அக்டோபர் 30, 2023 முதல் தங்களது கூட்டாண்மையை புதுப்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. Sathosaவின் பரந்த வலையமைப்பான 430+ நாடு முழுவதிலுமுள்ள விற்பனை நிலையங்களில் பல்வேறு வகையான Coca-Cola தயாரிப்புகள் கிடைப்பதை இந்த கூட்டாண்மை உறுதி செய்கிறது.

இந்த கூட்டாண்மை புதுப்பிப்பதற்கான கையொப்பமிடும் நிகழ்வில் Coca-Cola Beverages Sri Lanka (CCBSL) மற்றும் Sathosa Lanka Limited ஆகிய இரு நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர், இது புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

CCBSLஐ பிரதிநிதித்துவப்படுத்தி முகாமைத்துவ பணிப்பாளர் – Pradeep Pandey, பணிப்பாளர் நிதி – Rajeev Tandon, வர்த்தக பணிப்பாளர் – Prashant Kumar, முக்கிய கணக்குகள் மற்றும் நவீன வர்த்தகம், WS & Southern Region தலைவர் – Tania Karunaratne, முக்கிய கணக்கு முகாமையாளர் – Chamil De Silva மற்றும் உதவி வர்த்தக சந்தைப்படுத்தல் முகாமையாளர் – Oshani Ganegoda. Sathosa நிறுவனத்தின் தலைவர் Pasanda Yapa Abeywardena, பிரதம நிறைவேற்று அதிகாரி Sampath Senawatte, பிரதிப் பொது முகாமையாளர் கொள்வனவு – Roshari Sahajeewani மற்றும் பிரதிப் பொது முகாமையாளர் நிதி – Channa Kevitiyagala ஆகியோர் கலந்துகொண்டனர்.

அவர்களின் இருப்பு இந்த கூட்டான்மையின் தொடர்ச்சியான வெற்றிக்கு இரு அமைப்புகளின் கூட்டு மனப்பான்மை மற்றும் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division