மதுவம் மற்றும் வெதுப்பக மூலப்பொருட்களுக்கான தீர்வுகளில் முன்னணியில் திகழும் ஏபி மௌரி லங்கா பிரைவேட் லிமிடெட், அதன் ஊழியர்களுக்கான தேசிய தொழில் தகைமை சான்றிதழில் (NVQ) புதிய உச்சத்தை அடைந்துள்ளது .
அண்மையில், இரண்டு டசினுக்கு மேற்பட்ட ஊழியர்கள் விசேட தொழில் முறைகளில் தனிப்பட்ட திறன்கள் மற்றும் ஆற்றல்கள்போன்றவற்றை பல நிலைகளில் வழங்கும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தொழில்தகைமை சான்றிதழ் பயிற்சிநெறியை [NVQ ]
வெற்றிகரமாக பூர்த்தி செய்திருந்தனர், “உயர்தரமான பூர்த்தி செய்யப்பட்ட வெதுப்பக பொருட்களை வழங்க உதவுவதன் மூலம், இலங்கையில் வெதுப்பக தொழிலை மேம்படுத்துவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என, ஏபி மௌரி லங்கா பிரைவேட் லிமிடெட்டின் பணிப்பாளரான , சூரஜ்தீன் செய்யத் கூறினார். “எமது குழுவானது உயர் தரங்களைப் பேணி வருவதுடன் இந்த சான்றிதழ் பயிற்சிநெறியானது எங்கள் ஊழியர்களின் தொழில் வாழ்க்கையிலும் எங்கள் வாடிக்கையாளர்களின் வணிகங்களிலும் நாம் முயற்சி செய்த சிறப்புகளின் பிரதிபலிப்பாகும் ”. பாரம்பரிய கல்வித் தகைமைகள் போலன்றி, NVQ ஆனது அனுபவங்களில் கவனம் செலுத்துவதுடன், இந்த திறன்களும் நிபுணத்துவமும் வெதுப்பக துறை போன்ற தொழில்களுக்கு சிறந்த தெரிவாக அமைகின்றன .