வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற உயர்தரமான சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கான தமது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்து, தேசிய தொலைத்தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குரான SLT-MOBITEL, தனது இரத்தினபுரி கிளையை புதிய முகவரிக்கு இடமாற்றியுள்ளது.
இல. 428, பிரதான வீதி, இரத்தினபுரி எனும் முகவரியில் அமைந்துள்ள இந்தப் புதிய கிளை, வாடிக்கையாளர்களுக்கு இணைப்பை நெருக்கமடையச் செய்வதில் கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது. நவீன வசதிகளைக் கொண்டு, பெருமளவு உள்ளக இடவசதிகளுடனான இந்தக் கிளை, வாடிக்கையாளர்களுக்கு நட்பான வகையில் உள்ளம்சங்களைக் கொண்டுள்ளது.
SLT-MOBITEL flagship stores களில் கிடைக்கும் சகல பிரதான சேவைகளையும் புதிய இரத்தினபுரி கிளை வழங்கும். வாடிக்கையாளர் சேவை, புதிய இணைப்புகளை வழங்கல், கட்டணப் பட்டியல் உதவிகள் மற்றும் கோரிக்கைகள் போன்ற அனைத்தும், வாடிக்கையாளரின் சௌகரியத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
குறிப்பிட்ட வாழ்க்கை முறைகளுக்கு பொருத்தமான தீர்வுகள், பிரத்தியேகமான கவனிப்புகள் மற்றும் நிபுணத்துவ ஆலோசனைகள் போன்றவற்றை அர்ப்பணிப்பான கிளை ஊழியர்கள் வழங்குவார்கள். அதனூடாக சாதாரண கொடுக்கல் வாங்கல்களுக்கு அப்பாற்பட்ட வாடிக்கையாளர் உறவுகளை கட்டியெழுப்ப SLT-MOBITEL எதிர்பார்த்துள்ளது.
மேலும், இலங்கையின் இல்லங்கள் மற்றும் வியாபாரங்களில் அதிகரித்துச் செல்லும் டிஜிட்டல் தேவைகளை நிறைவேற்றக்கூடிய சாதனங்கள், புதிய இணைப்புகள் மற்றும் eSIM சலுகைகள் போன்ற ஊக்குவிப்பு அம்சங்களையும் இந்தக் கிளை கொண்டிருக்கும்.