தூர நோக்குடைய மாணவர் தொழில்முயற்சியாளர்களுக்கு Microsoft AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புத்தாக்கமான தீர்வுகளை வழங்கக்கூடிய சர்வதேச ரீதியிலான தொழில்நுட்பத் திறன் காண் போட்டியான Microsoft Imagine Cup, 2024 ஆம் ஆண்டுக்காக இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Microsoft Imagine Cup தற்போது 22 ஆவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்படுகின்றது. தற்போதைய உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தொழில்நுட்ப ரீதியான தீர்வுகளை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் இந்தப் போட்டி அமைந்துள்ளதுடன், இந்த ஆண்டு AI இல் புதுப்பிக்கப்பட்ட நோக்கத்தைக் கொண்டிருக்கும். இந்தப் போட்டியில் பங்கேற்பதனூடாக மாணவர்களுக்கு, USD 1,000 Azure Credits மற்றும் USD 2,500 OpenAI Credits ஆகியவற்றுடன், நிபுணர்களின் வழிகாட்டல்களைப் பெற்று நவீன AI தொழில்நுட்பத்தை அணுகும் வாய்ப்பு கிடைப்பதுடன், தமது AI பயணத்தை துரிதப்படுத்திக் கொள்ள முடியும். நிபுணத்துவ தொழில்நுட்ப மற்றும் தொழில்முயற்சியாண்மை ஆலோசனை வழங்கலுடன், USD 100,000 தொகையை வெல்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.
மேலும் Microsoft தவிசாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சத்யா நதெல்லாவுடன் ஆலோசனை வழிகாட்டல் அமர்வில் பங்கேற்வும் முடியும்.
சுமார் இரு தசாப்த காலப்பகுதிக்கு முன்னர் இந்தப் போட்டித் தொடர் ஆரம்பமானதுடன், இலங்கையின் மாணவர்களுக்கும் உலகளாவிய போட்டியின் இறுதிச் சுற்றுக்கும், ஆசியாவின் வெற்றியாளர்களாகவும் தெரிவாகியிருந்தனர்.