ஊட்டி வளர்த்தது தாய்மை
காட்டி கொடுத்தது கயமை
பாட்டி சொன்னது வாய்மை
பாடி பழகுவது வழமை
சீர் கொள்வது சிறப்பு
பார் புகழ்வது மதிப்பு
ஏர் பிடித்திழுப்பது உழைப்பு
கார் வண்ணன் நிறப்பு கருப்பு
பாட்டி சொன்னாள் கதை
மாட்டி வைத்தால் உதை
நாட்டி வளர்ப்பது விதை
எட்டி உதைத்தால் வதை
பாசம் கொண்டது தாய்மை
நேசம் பூண்டால் நன்மை
நாசம் செய்தால் கொடுமை
நாவால் பேசுவது வாய்மை
நாவுக்கு அறுசுவை ஊட்டி
நோவுக்கு மருந்தைக் கட்டி
பக்தி பாடல்கள் பாடி
அவளைப் பார்த்தேன் எட்டி
நகைப்புக்கு
சிரிப்பை வைத்து
காதலன் காதலியை அணைத்து
பகைக்கு சண்டையை ஏற்படுத்து
சுவைக்கு நாவை படைத்து
காலை ஆனதும் எழுந்திடுவோம்
மாலை வேளை விளையாடுவோம்
நாளை நாளை வரவேற்போம்
நன்மை செய்து பழகிடுவோம்
படித்து வாழ்வை உயர்த்திடடா..!!
நடித்து நானிலத்திலும்
வாழ்ந்திடடா..!!
கடித்து கரும்பை சுவைத்திடடா
மடித்து உடுப்பை அணிந்திடடா
அன்போடு வாழ்வை அமைத்திடு
பண்போடு உறவை பேணிடு
துன்பத்தோடு அவளை
அணைத்திடு
இன்பத்தோடு என்றும் பழகிடு
நாடு வளம்பெற உழைப்பாய்
பாடு பட்டுபட்டம் பெற்றிடுவாய்
காடு வெட்டி களனிஆக்கிடு
வீடு கட்டி நலமாய் வாழ்ந்திடு