யாரிங்கு நிரந்தரம்
எதைக்கொண்டு செல்லப்
போகிறோம்
பல்லாண்டு வாழ்வதென்றால்
பாரினிலே! ஏன் யுத்தம்
பலஸ்தீனம் பட்டபாடு
படுகவலை இனிவேண்டாம்
பச்சிளங்குழந்தை மரணம்
யார் மனதை நெருடவில்லை——!
ரத்த ஆறு ஓடியிங்கு
இன்னும் முடியவில்லை
இடிந்த வீடு கட்டுவதற்கு
எத்தனை காலம் செல்லுமிங்கு
யுத்தச்செலவு எத்தனைகோடி
பட்ட கடன் தீர வழி தேடி
எத்தனை குடும்பங்கள்
அநாதையாய்
ஏன் வீழ வேண்டும் மனிதம்
பேதையாய்—–!
பெண்களென்ன சிறுவருமே
சிறைவாசம் காணும் நிலை
ஆண்டுகள் பல கடந்தும்
ஆறிடுமா இந்த வாழ்வு
வெற்றி ஒன்று இல்லை
அடுத்து தோல்விதானே
அதற்காக இத்தனைகோடி
இழப்புகள் தேவைதானா——-!’
பணயக்கைதிகள் சொன்ன
பக்குவக்கதை கேட்டோம்
பவனிவரும் இந்தவுள்ளம்
பட்டாளத்துக்கும்
தேவைதானே!
வேண்டாம் இனியொரு யுத்தம்
வீணாக அழியவேண்டாம்
யாரும்
பேசித்தீர்ப்போம் பிரச்சினைகன்
பிறக்கும் ஆண்டில்
அதைக்காண்போம்