ஐக்கிய அரபு இராச்சியத்தில் பௌத்த விகாரையொன்றை நிர்மாணிப்பதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்பட ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் எச்.எச்.ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணிபுரியும் இலங்கையர் உட்பட அனைத்து பௌத்த சமூகத்தினர் சார்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் பௌத்த விகாரை நிர்மாணிக்க இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வேண்டுகோள் விடுத்தார்.
டுபாயில் நடைபெற்ற COP 28 மாநாட்டைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் எச்.எச்.ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானை கடந்த திங்கள் (04) இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்தித்துக் கலந்துரையாடிய போதே, இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.