இலங்கையின் மாணிக்கக் கற்கள் கைத்தொழில் துறையில் முதன்மையான நிறுவனமான Brilliant ஊரவள தனியார் நிறுவனம், இலங்கை தேசிய கைத்தொழில் சம்மேளனம் (CNCI) ஏற்பாடு செய்த கைத்தொழில்துறையின் சாதனையாளர் விருதுகள் – 2023 விருது வழங்கும் விழாவில் தேசிய அளவிலான பிரிவின் வெண்கலப் பதக்க விருதை வென்றுள்ளது. தேசிய பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் கைத்தொழில்களை ஊக்குவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்படுகின்ற மேற்படி விருது விழா அண்மையில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. நாட்டின் மாணிக்கக் கற்கள் மற்றும் தங்க ஆபரணத் துறைக்கு பெரும் பங்களிப்பு செய்து வரும் Brilliant Cuts நிறுவனம் மேற்படி விருதை வென்றமை அந் நிறுவனத்தின் வெற்றிகரமான பயணத்தின் மைல்கல்லாகும். ஆரம்பம் தொடக்கம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையினை தொடர்ச்சியாக வென்று தரமான உற்பத்திகளை மேற்கொண்டு வரும் தொழில்முயற்சியாக Brilliant Cuts நிறுவனம் தடம் பதித்துள்ளது.
Brilliant Cuts நிறுவனத்தின் ஊடாக உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியாக மாணிக்கக் கற்கள் மற்றும் ஆபரணக் கைத்தொழில் துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வரும் அந் நிறுவனத்தின் உரிமையாளர் விந்தியா பெரேரா இதற்கு முன்னரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை வென்றுள்ளார்.