Home » மதிப்புமிக்க ISO 9001:2015 சான்றிதழை பெற்றுள்ள Lina Manufacturing நிறுவனம்

மதிப்புமிக்க ISO 9001:2015 சான்றிதழை பெற்றுள்ள Lina Manufacturing நிறுவனம்

by Damith Pushpika
December 10, 2023 7:06 am 0 comment

Sunshine Holdings PLC இன் மருத்துவப் பிரிவான Lina Manufacturing Pvt., கடவத்தை உற்பத்தி ஆலையில் நடைமுறைப்படுத்தப்பட்ட தர முகாமைத்துவ அமைப்புக்கான (QMS) ISO 9001:2015/SLS ISO 9001:2015 சான்றிதழைப் பெற்றுள்ளது. இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் (SLSI) வழங்கப்பட்ட இந்த மதிப்பீடு, அதன் பல்வேறு தயாரிப்பு நோக்கங்களில் தர முகாமைத்துவத்தின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ISO 9001:2015 சான்றிதழ் செயல்முறையானது, Dry powder inhalation, காப்ஸ்யூல்கள், சுவாசப் பொருட்கள், இருதய மருந்துகள், கிரீம்கள் மற்றும் Nasal Sprayகள் உட்பட Lina Manufacturing அனைத்து தயாரிப்பு நோக்கங்களையும் உள்ளடக்கியது. ஆகஸ்ட் 1, 2023 முதல், புதிதாக இணைக்கப்பட்ட கிரீம்கள் மற்றும் Nasal Spray வகைகளும் இந்த சான்றிதழில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த விரிவாக்கமானது, அதன் தர முகாமைத்துவ செயல்முறைகளை உலகளாவிய தரநிலைகளுடன் சீரமைப்பதற்கும் அதன் செயற்பாடுகள் முழுவதும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் தக்க வைத்துள்ளது.

Lina Manufacturing நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டி சயந்தன் கூறியதாவது, “ISO 9001:2015 என்பது உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்வதற்கும் அதை மீறுவதற்கும் எங்களின் அர்ப்பணிப்புக்கான சான்றாகும். இது எங்கள் குழுவின் கூட்டு முயற்சி மற்றும் எங்கள் மருந்து தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்கான அவர்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.” எனத் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division