MAS Holdings நிறுவனம், கூரை மீது பொருத்தப்பட்ட Photovoltaic (PV) சூரிய சக்தி திட்டமான Project Photon இன் இரண்டாவது கட்டத்தை நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம், MAS Holdings நிறுவனத்தை இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் முன்னோடியாக மாற்றியுள்ளது, இது இலங்கையின் மிகப்பெரிய கூரை மீது பொருத்தப்பட்ட சூரிய சக்தி உற்பத்தியாளராகவும், வழங்குநராகவும் ஆக்கியுள்ளது.
Project Photon க்கு முன்னர், MAS Holdings நிறுவனம் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடந்த 1.7 MW சூரிய சக்தி திறனை மட்டுமே கொண்டிருந்தது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதற்கான குழுமத்தின் உறுதிப்பாட்டின் கீழ், Project Photon தொடங்கப்பட்டது, 18 இடங்களில் 16 MW சூரிய சக்தி சேர்க்கப்பட்டது. இப்போது, இரண்டாம் கட்டத்தின் நிறைவுடன், கூடுதலாக 6 MW, MAS இன் மொத்த சூரிய உற்பத்தி திறனை 23.7 MW ஆக அதிகரித்துள்ளது. சூரிய சக்தி உற்பத்திக்கான முந்தைய தேசிய சாதனையை முறியடித்து, MAS இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலப்பரப்பை மாற்றி அமைக்கும் நிறுவனமாக தனது நிலையை உறுதிப்படுத்துகிறது.
இந்த மாபெரும் திட்டத்தின் பிரமாண்டத்தை சரியாக புரிந்து கொள்ள, MAS வசதிகளில் சுமார் 67,000 Solar Panelகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த சூரிய சக்தி திறன் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 18,000 தொன் கார்பன் டை ஆக்சைடை (CO2) சேமிக்கிறது மற்றும் 10 கிரிக்கெட் மைதானங்களுக்கு சமமான பரப்பளவையும் அல்லது சுமார் 34,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் திறனையும் கொண்டுள்ளது.