Radisson ஹோட்டல் கண்டி, Radisson ஹோட்டல் கொழும்பு மற்றும் Radisson Blu ரிசோட் காலி ஆகியன 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி பிரமுகர்கள், முக்கிய அதிகாரிகள் மற்றும் பங்காளிகளின் பங்குபற்றுதலுடன் தமது புதிய சந்தைப்படுத்தல் இலக்கு பிரசாரத்தை வெளியிட்டன.
Radisson மற்றும் Radisson Blu வர்த்தக நாமங்களின் கீழ் இலங்கையிலுள்ள மூன்று சொத்துக்களும் கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய இடங்களில் அமைந்துள்ளதுடன் அவை நாட்டில் வெற்றிகரமாக ஓராண்டு பூர்த்தியை நிறைவுசெய்து முக்கிய மைற்கல்லை எட்டியது. சொத்து உரிமையாளர்களான Sino Lanka முகாமைத்துவ நிறுவனம், La Vie Hotels & Resorts மற்றும் Radisson Hotel Group ஆகியன இணைந்து Radisson Hotel Colombo இல் பிரமாண்டமான கொண்டாட்ட நிகழ்வை நடத்தின. இதில் பிரதம விருந்தினர்கள், உள்ளுர் வியாபார உரிமையாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் அதன் மூன்று ஹோட்டல்களுக்கான புதிய இலக்கு சந்தைப்படுத்தல் வீடியோ வெளியிட்டதன் மூலம் மகிழ்ச்சி இரட்டிப்பானது,
அது 2022 ஆம் ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தியதிலிருந்து இலங்கையில் உள்ள Radisson மற்றும் Radisson Blu ஹோட்டல்கள் கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய மூன்று இடங்களில் விருந்தோம்பல் அனுபவத்தின் தரத்தை மேலும் அதிகரித்து,