உயர் கல்வியின் எதிர்காலத்தை சீரமைப்பதில் முக்கிய படியாக, அரச சாராத உயர் கல்வி நிலையங்களின் இலங்கை சம்மேளனம் (SLANSHEI), தேசிய உயர் கல்வி மாநாட்டை முன்னெடுத்திருந்தது. இலங்கையின் உயர் கல்விக்கு TNE (Transnational Education) இனால் மேற்கொள்ளப்பட்டிருந்த குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் இந்த மாநாடு, கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் 2023 நவம்பர் 28ஆம் திகதி நடைபெற்றது.
2016 ஆம் ஆண்டு இலங்கையின் சில முன்னணி தனியார் உயர் கல்வி நிலையங்களினால், நாட்டின் அரச சாராத உயர் கல்வித் துறைக்கு தலைமைத்துவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் SLANSHEI நிறுவப்பட்டது. அரச சாராத உயர் கல்வித்துறையின் விரிவாக்கம், தரம் மற்றும் நியமங்களை மேம்படுத்தல், வெளிநாட்டு மாணவர்களை கவர்ந்திழுத்தல், ஆய்வுக் கோவை மற்றும் ஆய்வு வெளிப்படுத்தலை மேம்படுத்தல் மற்றும் சர்வதேசமயமாக்கலை ஊக்குவித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துவதாக மூலோபாயத் திட்டம் கவனம் செலுத்தியிருந்தது.
தேசிய உயர் கல்வி மாநாடு, வைபவ ரீதியில் பாரம்பரிய விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக கல்வி அமைச்சர் – கலாநிதி. சுசில் பிரேம்ஜயந்த் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்ட்ரியு பெட்ரிக் ஆகியோர் பங்கேற்றனர்.