சூழல் பாதுகாப்பில் தனது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்யும் வகையில், தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, 2024ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியை, “இலங்கையின் கண்டல்தாவர சூழல்கட்டமைப்பு” எனும் தொனிப்பொருளில் அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த கண்டல்தாவர கட்டமைப்பின் சூழல்சார் முக்கியத்துவத்தையும், அழகையும் கொண்டாடும் வகையில் இந்த நாட்காட்டி அமைந்துள்ளதுடன், நாட்டின் இயற்கை பாரம்பரியத்தின் பெறுமதியை வெளிப்படுத்துவதாகவும் இது அமைந்துள்ளது.
உலகளாவிய ரீதியில் கண்டல்தாவரங்கள் வேகமாக அழிவடைந்து வருகின்றன. இலங்கைக்கு உயிரியல் பரம்பலையும் காலநிலை மாற்ற மீண்டெழுந்திறனையும் வழங்குவதில் கண்டல்தாவரங்கள் ஆற்றும் பங்களிப்புக்கு முக்கியத்துவமளித்து தனது 2024ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியில் இதனை உள்வாங்குவதற்கு SLT-MOBITEL தீர்மானித்திருந்தது. அத்துடன், நாட்டில் எஞ்சியிருக்கும் கண்டல்தாவரங்களை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது.
SLT இன் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “தேசத்தின் டிஜிட்டல் மாற்றயமைப்புப் பணிகளை முன்னெடுப்பதில் முன்னோடிகள் எனும் வகையில், SLT-MOBITEL தனது பொறுப்புணர்வு என்பது வியாபார இலக்குகளை எய்துவதற்கு அப்பாலானது என்பதை உணர்ந்துள்ளது. ” என்றார்.
இந்த நாட்காட்டி 12 வர்ணமயமான ஓவியங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும், இலங்கையின் வெவ்வேறு கண்டல் தாவர கட்டமைப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.