கிறிஸ்மஸ் பண்டிகைக்குத் தேவையான அனைத்தையும் நாடு முழுவதிலும் உள்ள 57 ஆர்ப்பிக்கோ சுப்பர்சென்டர்கள், சுப்பர்ஸ்டோர்ஸ் மற்றும் டெய்லி சுப்பமார்க்கட் காட்சியறைகளின் ஊடாக உற்சாகமான வாராந்த வெகுமதிகளுடன் பெற்றுக்கொள்ளக் கூடிய மிகவும் எதிர்பார்ப்பு நிறைந்த ‘ஆர்ப்பிக்கோவுடன் பண்டிகைக் காலத்தை அனுபவித்திடுங்கள்’ என்ற பிரசாரத்தை அறிவிப்பதில் ஆர்ப்பிக்கோ பெருமையடைகிறது.
வீட்டுப் பொருட்களுக்கான தரம் மற்றும் சௌகரியத்துக்கு ஒத்த பெயரைக் கொண்டு, பெறுமதி மிக்க அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பரந்துபட்ட தேவைகளை ஆர்ப்பிக்கோ பூர்த்திசெய்துவருகிறது. நாளாந்த அத்தியாவசியப் பொருட்கள், வேகமாக நகரும் அத்தியாவசியப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், தளபாடங்கள், மெத்தைகள், இறப்பர் உற்பத்திகள், நீர்த் தாங்கிகள், இலத்திரனியல் பொருட்கள், உடனடித் தயாரிப்புக்கள், பரிசுகள், பரிசுக் கூப்பன்கள், பரிசுப் பொதிகள் போன்ற பாரிய பொருட்களை ஆர்ப்பிக்கோ வழங்கி வருகிறது. அது மாத்திரமன்றி கிறஸ்மஸ் கொண்டாட்டத்துக்கான அனைத்துப் பொருட்களையும் ஒரே இடத்தில் கொள்வனவு செய்ய முடிவதுடன், இணையற்ற விலைக் கழிவுகள் 2024 ஜனவரி 15ஆம் திகதி மாத்திரமே காணப்படும்.
கிறிஸ்மஸ் அலங்காரங்களுக்குப் பரந்துபட்ட தெரிவுகளை ஆர்ப்பிக்கோ வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தமது அலங்காரத் தேவைகளை ஒரே கூரையின் கீழ் பூர்த்திசெய்துகொள்ள முடியும்.
இந்தப் பண்டிகைக்காலத்தில் ஆர்ப்பிக்கோ வழங்கும் கொண்டாட்டகால பரிசுப்பொதிகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்புக் காணப்படுகிறது. வாடிக்கையாளர்கள் 10 வகையான ஈர்க்கக்கூடிய தெரிவுகளில் தமக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புக் காணப்படுகின்றது.
இந்தப் பண்டிகைக் காலத்தில் மகிழ்ச்சியாக விழாவைக் கொண்டாடும் ஆர்பிக்கோ, வாராவாரம் உற்சாகமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களை மேலும் சிறப்பான கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு வழிவகுக்கின்றது.
கொள்வனவு செய்யும் அளவுகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட வர்த்தக நாமங்களின் அளவுகோல்களுக்கு இணையாக வெகுமதிகளை வெல்வதற்கான வாய்ப்புக்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிகரிக்கும். பரிந்துரைக்கப்பட்ட 67 வர்த்தக நாமங்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களிலிருந்து வாராந்த வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பரிந்துரைக்கப்பட்ட மூன்று வர்த்தக நாமங்களில் 5000 ரூபா முதல் 7499 வரையில் செலவுசெய்யும் வாடிக்கையாளர்களுக்கு வாராந்த சீட்டிழுப்பில் விற்பனை செய்வதற்கான ஒரு வாய்ப்புக் கிடைப்பதுடன், பரிந்துரைக்கப்பட்ட ஐந்து வர்த்தக நாமங்களில் 6,499 ரூபா முதல் 9,999 ரூபா வரையில் செலவுசெய்த வாடிக்கையாளர்கள் வாராந்த சீட்டிழுப்பில் பங்குபற்ற 2 வாய்ப்புக்களும், மெகா சீட்டிழுப்பில் கலந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பும் கிடக்கும். அதேநேரம், பரிந்துரைக்கப்பட்ட 7 வர்த்தகநாமங்களில் 10,000 ரூபா முதல் 14,999 ரூபா வரையில் செலவுசெய்த வாடிக்கையாளர்களுக்கு வாராந்த சீட்டிழுப்பில் கலந்துகொள்ள 3 வாய்ப்புக்களும், மெகா சீட்டிழுப்பில் கலந்துகொள்ள 2 வாய்ப்புக்களும் கிடைக்கும். பரிந்துரைக்கப்பட்ட 10 வர்த்தகநாமங்களில் 15,000 ரூபாவுக்கு மேலதிகமாக செலவுசெய்யும் வாடிக்கையாளர்களுக்கு வாராந்த சீட்டிழுப்பில் கலந்துகொள்ள 5 வாய்ப்புக்களும், மெகா சீட்டிழுப்பில் கலந்துகொள்ள 3 வாய்ப்புக்களும் கிடைக்கும்.
அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் டிவிகள் மற்றும் சோஃபாக்கள் போன்ற உயர் மதிப்புள்ள பொருட்களை வெகுமதியாகப் பெற்றுக்கொள்ளலாம் என்பதுடன், ஆர்ப்பிக்கோவுக்கு மேற்கொள்ளும் ஒவ்வொரு விஜயமும் சிறப்புப் பரிசை வழங்குவதற்கான வாய்ப்பாக அமையும்.
இந்தச் சீட்டிழுப்புகள் ஆர்ப்பிக்கோவின் பிராந்திய சுப்பர்சென்டர்கள், சுப்பர்ஸ்டோர்ஸ் மற்றும் டெய்லி காட்சியறைகளில் இடம்பெறுவதுடன், நாடு முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் வெற்றிகொள்வதற்கு சமமான வாய்ப்பு வழங்கப்படும்.
“பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்கள் தமக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அல்லது தமது கொண்டாட்டங்களைத் திட்டமிடும்போது மகிழ்ச்சியான, வசதியான மற்றும் பலனளிக்கும் ஷொப்பிங் அனுபவங்களை உருவாக்க நாம் விரும்புகின்றோம்” என ரிச்சட் பீரிஸ் டிஸ்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் ஜானக குமார தெரிவித்தார்.
“நாம் வழங்கும் விலைத் தள்ளுபடிகள் மற்றும் தெரிவுகளின் பல்வகைமைய எந்த சில்லறை விற்பனையாளர்களுடனும் ஒப்பிட முடியாது. எமது ‘ஆர்ப்பிக்கோவுடன் பண்டிகைக் காலத்தை அனுபவித்திடுங்கள்’ என்ற பிரசாரம் எந்த ஷாப்பிங் பட்டியலையும் ஒரே கூரையின் கீழ் எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் நிறைவேற்றுகிறது” என்றார்.
ஆர்ப்பிக்கோவுடன் பண்டிகைக் காலத்தை அனுபவித்திடுங்கள்’ பிரசாரத்தைத் தெரிவுசெய்து கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவும், மகிழ்ச்சியைப் பரப்பவும், நீடித்த நினைவுகளை உருவாக்கவும் அனைவருக்கும் ஆர்ப்பிக்கோ அழைப்பு விடுக்கிறது. இந்தப் பண்டிகைக் காலத்தில் சிறந்த விடுமுறை ஷாப்பிங் அனுபவத்திற்கான இடமாக இது அமையும் என்பதில் ஐயமில்லை.