தேசத்தின் பெருமையான மக்கள் வங்கி, தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வெகுமதியளிக்கும் வகையில், பீப்பிள்ஸ் கடனட்டைகளில் பல்வகைப்பட்ட சலுகைகள் மற்றும் இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களை வழங்கி, இந்த பண்டிகைக்கால உற்சாகத்தை மேம்படுத்தியுள்ளது.
பீப்பிள்ஸ் கடனட்டைதாரர்கள் தற்போது முன்னணி ஹோட்டல்கள் மற்றும் உல்லாச விடுதிகள், உணவகங்கள், சுப்பர்மார்க்கெட்டுக்கள், மோட்டார்வாகன சேவை மையங்கள், வைத்தியசாலைகள், ஒன்லைன் விற்பனை மையங்கள், உடற்பயிற்சி மையங்கள் மற்றும் புத்தகங்கள், ஆடையணிகள், பாதணிகள், தோல் உற்பத்திப் பொருட்கள், வீட்டுப் பாவனைப் பொருட்கள், இலத்திரனியல் பொருட்கள் மற்றும் ஆபரணம் போன்ற வாழ்க்கைமுறைப் பொருட்களின் பல்வகைப்பட்ட தெரிவுகளை வழங்கும் பல்வேறுபட்ட விற்பனை மையங்களில் 75% வரை கணிசமான தள்ளுபடிகளைப் பெற்று அனுபவிக்க முடியும். மேலும், தெரிவு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் 24 மாதங்கள் வரையான வட்டியில்லா, இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களின் பயன்களையும் அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
மக்கள் வங்கியின், பிரதிப் பொது முகாமையாளர் (கொடுப்பனவு, செயல்முறை முகாமைத்துவம் மற்றும் தர நிர்ணயம்) நில்மினி பிரேமலால் அவர்கள் பண்டிகைக் காலத்தில் வழங்கப்படுகின்ற சேமிப்புக்கள் குறித்து கருத்து வெளியிடுகையில், “எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு பண்டிகைக் கால கொண்டாட்டங்களை விசேடமானதாக மாற்றும் முயற்சிகளை மக்கள் வங்கி எப்போதும் மேற்கொண்டு வருகின்றது. சலுகைகளைப் பொறுத்தவரையில், எமது வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான தேவைகள் இருப்பதை நாம் தெளிவாக புரிந்து கொண்டுள்ளதுடன், அவர்களுடைய வாழ்க்கைமுறைகளுக்கு ஏற்றவாறு பெறுமதிமிக்க மற்றும் தரமான சலுகைகளை வழங்குவது எமது நோக்கமாகும்,” என்று குறிப்பிட்டார்.
மக்கள் வங்கியின் வீசா / மாஸ்டர் கிளாசிக், கோல்ட், பிளாட்டினம், சிக்னேச்சர், இன்ஃபினிட்டி மற்றும் மாஸ்டர் வேர்லட் அட்டைதாரர்கள் இப்பண்டிகைக்கால சலுகைகளை பெற உரித்துடையவர்கள் என்பதுடன், நாடளவிய
ரீதியில் 3,500 க்கும் மேற்பட்ட விற்பனை மையங்களில், 2024 ஜனவரி 15 வரை இச்சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
மக்கள் வங்கி கடன் / டெபிட் அட்டைகள் இலங்கை எங்கிலும் விற்பனை மையங்கள் மத்தியில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அங்கீகரிக்கப்படுவதுடன், சர்வதேசரீதியாக பிரயாணம் செய்கின்றவர்களின் சௌகரியத்தை மேம்படுத்தும் பொருட்டு உலகில் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட விற்பனை மையங்களில் வாடிக்கையாளர்கள் தமது அட்டைகளை உபயோகிக்க முடியும்.
வாடிக்கையாளரின் தகவல் விபரங்களின் இரகசியத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேசரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற பாதுகாப்பு தராதரங்களைக் கடைப்பிடித்து, அட்டைதாரர்களுக்கு முழுமையான பாதுகாப்பினை மக்கள் வங்கி அட்டைகள் அனைத்தும் வழங்குகின்றன. அத்துடன் மக்கள் வங்கி வீசாஃமாஸ்டர் பிளாட்டினம் மற்றும் வீசா சிக்னேச்சர், இன்/பினிட்டி/மாஸ்டர் வேர்ல்ட் அட்டைதாரர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் பிரயாண காப்புறுதியையும் மக்கள் வங்கி வழங்குகின்றது.
மேலும், மக்கள் வங்கி வீசா சிக்னேச்சர், இன்ஃபினிட்டி மற்றும் மாஸ்டர் வேர்ல்ட் அட்டைதாரர்கள், விமான நிலைய சொகுசு ஓய்வறை வசதியை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடிவதுடன், 148 க்கும் மேற்பட்ட நாடுகளில் 1,300 க்கும் மேற்பட்ட விமானநிலைய சொகுசு ஓய்வறைகளை (Lounge Facility) உபயோகிக்க இது அட்டைதாரர்களுக்கு இடமளிக்கின்றது.
பண்டிகைக்காலங்களில் மாத்திரமல்லாது, வருடம் முழுவதும் நிகரற்ற சலுகைகளையும், மேம்பட்ட சௌகரியத்தையும் பீப்பிள்ஸ் அட்டைகள் வழங்குகின்றன. நாடளவிலுள்ள 747 மக்கள் வங்கிக் கிளைகள் மற்றும் சேவை மையங்கள் கொண்ட விசாலமான வலையமைப்பு, பீப்பிள்ஸ் வேவ் மற்றும் பீப்பிள்ஸ் பே மொபைல் வங்கிச்சேவை செயலிகள், பீப்பிள்ஸ் வெப் இணைய வங்கிச்சேவை வசதி மற்றும் 280 க்கும் மேற்பட்ட சுய வங்கிச்சேவைப் பிரிவுகள் மூலமாக 24 மணி நேரமும் மக்கள் வங்கி கடனட்டைகளுக்கான கொடுப்பனவுகளை சௌகரியமாக மேற்கொள்ள முடியும்.
நீங்கள் ஏற்கனவே மக்கள் வங்கி கடனட்டைதாரராக இருப்பின், மேற்குறிப்பிட்ட தள்ளுபடிகளை வழங்கும் எந்தவொரு விற்பனை மையத்திலும் உங்கள் கடனட்டையை உபயோகித்து இச்சலுகைகள் அனைத்தையும் நீங்கள் இலகுவாக பெற்று அனுபவிக்க முடியும்.
மகத்தான இச்சலுகைகள் அனைத்தையும் பெற்று அனுபவிக்க விரும்புகின்றவராக நீங்கள் இருப்பின், மக்கள் வங்கி கடனட்டைக்கு விண்ணப்பிப்பதற்கு எந்தவொரு மக்கள் வங்கிக் கிளைக்கும் அல்லது சேவை மையத்திற்கும் சென்று நீங்கள் அதனை மேற்கொள்ள முடியும்.
மக்கள் வங்கி கடனட்டைகள் வழங்கும் சலுகைகள் தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள விரும்பினால் 1961 என்ற மக்கள் வங்கியின் துரித சேவை அழைப்பு இலக்கத்தை தொடர்பு கொண்டோ அல்லது www.peoplesbank.lk என்ற இணையத்தளத்தினூடாகவோ அறிந்து கொள்ள முடியும்.
நாட்டின் முதன்மையான அனுமதி உரிமம் பெற்ற வர்த்தக வங்கியான மக்கள் வங்கி, 747 கிளைகள் மற்றும் சேவை மையங்களுடன் இலங்கையின் மிகப் பாரிய வங்கிச்சேவை அடிச்சுவட்டைக் கொண்டுள்ளது. 62 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுடன், 14.7 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தனது சேவைகளை வங்கி வழங்கி வருவதுடன், நாட்டில் எந்தவொரு நிதியியல் சேவைகள் வழங்குனர் மத்தியிலும் இதுவே மிகப் பாரியதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.