இலங்கையின் வங்கிச்சேவை மற்றும் நிதித்துறையில் முன்னோடியாகத் திகழும் மக்கள் வங்கி, சர்வதேச வங்கி தினத்தை கொண்டாடுகிறது. சர்வதேச வங்கிகள் தினம் என்பது நமது அன்றாட வாழ்வில் வங்கிகளின் முக்கிய பங்கை அங்கீகரிக்கும் ஒரு உலகளாவிய அனுட்டிப்பு நிகழ்வாகும். ஆண்டுதோறும் நடத்தப்படும், இந்த தினம் நமது நிதியியல் கட்டமைப்புகளின் முதுகெலும்பாக இருக்கும் ஸ்தாபனங்களுக்கு கெளரவம் செலுத்துகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு அனுசரணையளிப்பது, சேமிப்பை வளர்ப்பது மற்றும் உலகளாவில் தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு அத்தியாவசிய நிதிச் சேவைகளை வழங்குவதில் வங்கிகளின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. 14.7 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர் தளம் மற்றும் ரூபா. 3 டிரில்லியனுக்கும் அதிகமான திரட்டிய சொத்துக்களுடன், மக்கள் வங்கி இலங்கை முழுவதும் வங்கிச்சேவையை வெகுசனங்கள் மத்தியில் எடுத்துச்செல்வதில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. வளர்ச்சிக்கான முன்னேற்றத்தைத் தழுவி, தொலைதூர பின்தங்கிய பிரதேசங்களிலும் கூட அதிநவீன டிஜிட்டல் சேவைகளை வங்கி விரிவுபடுத்துகிறது.
மக்கள் வங்கி கடந்த பல ஆண்டுகளாக, நாட்டின் சமூக-, பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கை வகித்து, தேசத்தின் பெருமை என்ற பெயரைச் சம்பாதித்துள்ளது. நாடு முழுவதும் 747 சேவை நிலையங்களுடன், தனிநபர்கள் மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு முழுமையான சேவைகளை வங்கி வழங்குகிறது. அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கு நிதியளிப்பதில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் தனது அர்ப்பணிப்பை அது மேலும் எடுத்துக்காட்டுகிறது.
தொற்றுநோய்க் காலத்தில், மக்கள் வங்கி, அதன் Mahajana Mehwara வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் மூலம், கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முக்கிய அரச வைத்தியசாலைகளுக்கு ரூபா. 20 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள முக்கிய மருத்துவ உபகரணங்களுக்கு நிதியளித்தது. சமூக சேவைக்கான வங்கியின் அர்ப்பணிப்பில் சீமாட்டி ரிட்ஜ்வே மற்றும் காசல் வைத்தியசாலைகளுக்கு நன்கொடைகள் ரூபா. 10 மில்லியனுக்கும் அதிகமானவை என்பதுடன், மற்றும் பின்தங்கிய பாடசாலைகளுக்கு சூரிய மின்சக்தியில் இயங்கும் மின்சார உற்பத்திக் கட்டமைப்புகளை வழங்குதல் ஆகியவை அடங்கும்.
1961ஆம் ஆண்டு சட்ட இலக்கம். 29 இன் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட மக்கள் வங்கி கூட்டுறவு வணிகம் மற்றும் கிராமிய வங்கிச்சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. மொழியியல் தடைகளை தகர்த்து, சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்து, வங்கி சேவையை அனைவருக்கும் அணுகக்கூடியதாக வங்கி மாற்றியது.