பிரமிப்பை
ஏற்படுத்தியவையெல்லாம்
இப்போது சலிப்பூட்டுகின்றன….
திருவிழாக்கள்,
புதுத்துணிகள்,
பண்டிகைகள்,
சில நேரங்களில் புத்தகங்கள் கூட..
ஏன் இந்த மாற்றம் ?
கடந்து வந்த
கடினமான தருணங்களா…….?
நிராசையாகிப் போன
ஆ(பேரா)சைகளா…….?
நிறைவேறாமற் போன
என் சிறு சிறு கனவுகளா,……….?
வேலை இல்லாமல்
பசியுடன் சுற்றித் திரிந்த நாட்களா……?
தோல்விகளா……..?
வேலையினாலுண்டான
வெறுப்பா…….?
ஊரிலுள்ள சில புத்திஜீவிகளால் ஏற்பட்ட
அவமானங்களா…….?
அவமானங்களின் போது
அழுகையை அடக்கியதன் விளைவுகளா……?
செக்கு மாட்டைப் போல
ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்
என் இந்த வாழ்வா?!
மெச்சூரிட்டியா……..?
எதுவென சரியாய்
சொல்லி விட முடியவில்லை..
மாறாக,
தனிமை கொஞ்சம் ஆறுதல் தருகிறது..
தலைகோதி எனை தேற்றுகிறது,
ஆஸ்பத்திரிப் பயணங்கள்தான்
உயிரோடிருப்பதை அவ்வப்போது
நினைவூட்டுகின்றன..
ஆனால்,
ஏன்?
இந்த இனம் புரியாத வெறுமை
நடுக்கடலில்
தனித்து விடப் பட்டதைப் போன்ற தனிமை??
காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை..
ஆனால், இப்போதெல்லாம்
எதுவும் எனக்கு
பிரமிப்பை ஏற்படுத்துவதில்லை ..
எதன் மீதும் தீராத காதல்
எனக்கு தோன்றுவதில்லை..
ஏனோ நான் அறிந்து கொள்ள
முற்படவும் இல்லை….
சலிப்பு
127
previous post