உன்னை ஊரெல்லாம்
வசைப்பாடிய உறவுகள்..
தூக்கி வெச்சு ஆடுதே…?
உன் குணத்திற்காக அல்ல..
நீ வைத்திருக்கும்
பணத்திற்காக ..!
பொத்தி புதைத்து ..
சிதைந்து கெட்டதோ..!
உன் இதயத்தை
தட்டிக் கேளு..!
வெட்கம் வந்து..
தலை குனியுதோ..!
வாழ்ந்த வாழ்க்கையை
கொஞ்சம் நினைத்துப் பாரு.!
புத்தி கெட்டு நீ செய்த
காரியத்தால் ..!
தேடி வந்து கொட்டி தீர்த்ததே..
தேள் போல..!
ஆனால் இப்போ உன்
பண போதையில் மிதக்குது..
நீ தேடி பிடித்த உறவுகள் .!
நாளை தெருவில் தள்ளி விடும்
கருக்குப் பனையான்
கூட்டங்கள்..!
பணம் பத்தும் செய்யும் தம்பி
பழகியவர்களை
மறக்கச் செய்யும்
வதி விடத்தை
தொலைக்க செய்யும்
நரம்பு ஒண்ணு சுளுக்குனா..!
இருக்குற பணம் கூட காணாது.!
பணம் பத்தும் செய்யும்.!
325