நாடு முழுவதிலுமிருந்து IELTS பரீட்சைக்கு தோற்றி சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆறு மாணவர்களுக்கு, தமது தெரிவுக்குரிய பல்கலைக்கழக கல்வியை தொடர்வதற்கான புலமைப்பரிசிலை வழங்கியுள்ளது. நவம்பர் 27ஆம் திகதி கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் நடைபெற்ற IELTS பரிசில் வழங்கும் நிகழ்வின் போது இந்த புலமைப்பரிசில் வழங்கப்பட்டிருந்தது.
உலகளாவிய ரீதியில் ஆங்கிலத்தில் கற்கைகள் நடைபெறும் பல்கலைக்கழகங்களில் தமது கற்கைகளை தொடர்வதற்கான கட்டணங்களில் 5000 ஸ்டேர்லிங் பவுண்களை தமது உயர் கற்கைகளை தொடர்வதற்கு பிரிட்டிஷ் கவுன்சில் வாய்ப்பளித்திருந்தது. இதனூடாக, இளம் மாணவர்களுக்கு தமது கல்விசார் கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கான உதவிகளை வழங்கியிருந்தது.
2023 முதல் 2024 மார்ச் மாதம் வரையில் தமது பட்டப்படிப்பு அல்லது பட்டப்பின்படிப்பு கற்கைகளை உள்நாட்டில் அல்லது வெளிநாடுகளில் தொடர்வதற்காக IELTS பரீட்சையினூடாக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு இந்த வருடாந்த போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இலங்கை, சீனா, ஜப்பான், ஹொங் கொங், இந்தோனேசியா, கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்வான், தாய்லாந்து, வியட்நாம், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் வதியும் IELTS பரீட்சைக்கு தோற்றுவோர் இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும்.