டுபாயை தலைமையிடமாகக் கொண்ட ஒரு முன்னணி இடம்பெயர்வு ஆலோசனை நிறுவனமான IMM கன்சல்ட், இலங்கையின் கொழும்பில் தனது புதிய அலுவலகத்தை திறந்து வைத்துள்ளது. இந்த விரிவாக்கம் IMM கன்சல்ட்டின் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கின்றது, ஏனெனில் அது தொடர்ச்சியாக ஆற்றல் பெற்று இடம்பெயர்வு ஆலோசனை சேவைகள் துறையில் வளர்ச்சி காண்கிறது. ஷமீர் நிசார் மற்றும் குலாம் மத்னி ஆகியோரால் டுபாயில் நிறுவப்பட்ட IMM கன்சல்ட், இடம்பெயர்வு ஆலோசனையில் விரைவாக நம்பகமான பெயராக மாறியுள்ளது, சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் குடியேற்ற செயல்முறைகளில் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவுவதற்கான பணியினை திறம்பட செய்து வருகின்றது. நிறுவனம் ஏற்கனவே டுபாயில் ஒரு வலுவான இருப்பை நிறுவியுள்ளது, மேலும் இந்த புதிய அலுவலகத்தை கொழும்பில் திறப்பது வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற ஆதரவை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகின்றது. கனடா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய 5 கண்கள் நாடுகளுக்கான இடம்பெயர்வு சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற IMM கன்சல்ட் அதன் தனித்துவமான சேவைக்காக தொழில்துறையில் சிறந்து நிற்கிறது.
மிகவும் விரும்பப்படும் இந்த இடங்களின் சிக்கலான குடியேற்ற செயல்முறைகளைக் கையாள்வதில் நிறுவனத்தின் ஆழ்ந்த அறிவு மற்றும் நிபுணத்துவம் அவர்களைத் தனித்துவமானவர்களாக எடுத்துக்காட்டுகின்றது.
IMM கன்சல்ட் அதன் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையில் பெருமிதம் கொள்கிறது, அதன் வாடிக்கையாளர்களின்த னிப்பட்ட தேவைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப் பட்ட தீர்வுகளை வழங்குகிறது.
மிகவும் அனுபவம் வாய்ந்த இடம்பெயர்வு ஆலோசகர்கள் மற்றும் சட்டப் பணியாளர்கள் குழுவுடன், நிறுவனம் குடியேற்றப் பயணம் முழுவதும் தனிப்பயனாக்கப்பட்ட கவனத்தையும் துல்லியமாக வழிகாட்டுதலையும் உறுதி செய்கிறது.