100
இலங்கையின் முன்னணி அரச அபிவிருத்தி வங்கியினால் தனது வாடிக்கையாளர்களுக்கு RDB VISA டெபிட் கார்ட்’ அறிமுகப்படுத்தப்பட்டது. RDB வங்கியின் தலைவர் சிறிகுமார குணசிங்க, தலைமையில் 24.11.2023 அன்று RDB தலைமை அலுவலகத்தில் வங்கியின் பல வாடிக்கையாளர்களுக்கு RDB VISA டெபிட் கார்டு அடையாளமாக வழங்கப்பட்டது. இதன் விளைவாக, RDB வங்கியின் 6 மில்லியன் வாடிக்கையாளர்கள், RDB VISA டெபிட் கார்டு மூலம் பல சிறப்புப் பலன்களுடன், 100,000க்கும் மேற்பட்ட VISA முத்திரைச் சேவை மையங்கள் மூலம் 24 மணி நேரமும் பாதுகாப்பான, விரைவான பரிவர்த்தனைகளைச் செய்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.