அரசாங்க நிதிக்குழு தொடர்பிலும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையே பாராளுமன்றத்தில் காரசாரமான மோதல் இடம்பெற்றுள்ளது. பொருளாதாரம் தொடர்பில் 07 நாட்கள் விவாதத்துக்கு தான் தயாரென அமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்ததையடுத்து, 07 நாட்களல்ல 03 மணிநேரம் தொலைக்காட்சியில் விவாதத்துக்கு தயாரெனக் கூறி அமைச்சர் பந்துல குணவர்தன அவரது சவாலை ஏற்றுக்கொண்டார். அரச நிதிக்குழுவின் தலைவராக எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைவராக செயற்படுகிறார். பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 121/31 இன் கீழ், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, அறிக்கையின் பல முக்கிய பரிந்துரைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துக்கொண்டிருந்த போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சருடன் காரசாரமான உரையாடலை மேற்கொண்டார்.
இருவருக்கும் இடையே நடந்த உரையாடலில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கையில்,
“ஏழு நாட்கள் தேவையில்லை. மூன்று மணி நேரம் விவாதத்துக்கு வருமாறு உங்களை அழைக்கிறேன். தொலைக்காட்சி அலைவரிசையில் 03 மணிநேரம் விவாதத்திற்கு வாருங்கள். ஏழு நாட்கள் கேட்டீர்கள் தானே. தேவையில்லை. மூன்று மணி நேரம் வாருங்கள். அரசாங்க நிதி பற்றி மட்டும் விவாதிப்போம். என் தாயார் பாலூட்டிய என் தாய் மொழியான சிங்களத்தில் உங்களுடன் எந்த நேரத்திலும் பகிரங்க விவாதத்திற்கு நான் தயார்.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அப்படியென்றால் ஒரு நாள் அவர்களுக்கு ஆட்சி கிடைத்தால், நாட்டுக்கு அப்படி ஏதாவது நடந்துவிடுமா என்பதை பின்னர் யோசிப்போம். துரதிஷ்டவசமாக நடந்துவிட்டால் இந்த ஏற்பாட்டை முற்றிலுமாக மாற்றினால் நாடு முழுவதுமே அழிந்து விடும் என்று அர்த்தம். அதனால்தான் நாம் விவாதம் நடத்த வேண்டும். இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா இல்லையா? இந்த அறிக்கை விவாதிக்கப்பட வேண்டும். சபாநாயகர் சம்மதித்தால் மூன்று நாட்களுக்கு விவாதம் நடத்த வேண்டும். நாங்கள் ஒப்புக்கொள்கிறோமோ இல்லையோ விவாதத்தை பரிந்துரைக்கிறோம். இது நிதி தொடர்பான பாராளுமன்றத்தின் பொறுப்பு. அவரது கூற்றிலிருந்து, ஒரு நாட்டைப் பொறுப்பேற்கப் போகும் ஒரு அரசின் தலைவரின் தரம் குறித்து, அவரது இயல்பு குறித்து, இந்நாட்டு அறிவாளிகள் ஒரு முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. மிகச் சிறிய ஒன்றைப் பற்றிய உண்மையான புரிதல் எங்களிடம் உள்ளது. சபாநாயகர் அவர்களே, இந்த வருமானக் குறைவு ஒரே நாளில் ஏற்பட்டதல்ல என்பதை சபையில் நான் தெளிவாகக் கூறியுள்ளேன். 2003 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ பொறுப்புச் சட்டத்தை முழுமையாகப் புறக்கணித்ததாலும் அமுல்படுத்தப்படாததாலும் இந்த நாடு வங்குரோத்தானது. இதை தரவுகள் ரீதியாக நிரூபிக்க முடியும்.
நாட்டின் பொருளாதாரம் சரிந்தது வரி நீக்கியதால் அல்ல.
அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சராக அவர் அமைச்சரவையில் அமர்ந்திருந்தபோது, அந்த 05 வருடங்களில் இந்த பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததை ‘பொருளாதார ஆசானாசியா’ என்ற பொருளாதார வீழ்ச்சியை மையமாக் கொண்டு தரவுகளுடன புத்தகம் எழுதியுள்ளேன்.
எனவே தரவுகளைப் பாருங்கள். உயர் நீதிமன்றம் முன்வைத்த உண்மைகளின்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் மதிக்கிறோம்” என்றார்.