இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றிய ஏற்றுமதியாளர்களை கௌரவித்து அவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை வருடாந்தம் ஏற்பாடு செய்துள்ள ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வு கடந்த 23ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடந்த இரண்டு நிதியாண்டுகளுக்கான சிறந்த ஏற்றுமதியாளர்கள் மதிப்பீட்டுக்காக இரண்டு பிரிவுகளின் கீழ் 51 விருதுகள் வழங்கப்பட்டன. ஆண்டின் புத்தாக்க ஏற்றுமதி தயாரிப்பு, சிறந்த ஏற்றுமதியாளர் உள்ளிட்ட 16 விருதுகளை வென்ற MAS Holdings சார்பாக MAS Active பிரதம நிறைவேற்று அதிகாரி செலன் குணதிலக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்டார். முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் MAS Holdings குழு உறுப்பினர் எம். தீபிகா குமாரியும் படத்தில் காணப்படுகிறார். (படம்-: சுலோச்சன கமகே)
25ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழா
499