496
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவில் சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதற்கான விசேட கூட்டம், தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் அவரது அமைச்சில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
தொழில்துறை எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாகவும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.