எதிர்வரும் திங்கட்கிழமை (27) வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார். இது எதிர்வரும் புதன்கிழமை (29) காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதுடன், இதனால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (03) வரை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், அவர் தெரிவித்தார். தற்போதைய மாதிரிக் கணிப்புக்கமைய இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு, கிழக்கினூடாகவே நகரும் வாய்ப்பு உள்ளதாகவும், அவர் தெரிவித்தார். இது உருவாகும் காலப்பகுதியில் நிலவும் வளிமண்டல வெப்பநிலை, சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை, காற்றழுத்த தாழ்வு நிலையின் அமுக்க சாய்வுத்தன்மை மற்றும் தாழ்வு நிலைக்கு கிடைக்கும் மறை வெப்பசக்தி ஆகியற்றை பொறுத்து நகரும் திசை மாற்றமடையலாம். மேற்குறிப்பிட்ட காரணிகளால் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையிலிருந்து புயலாக வலுப்பெறும் சாத்தியக்கூறுகளை உருவாக்க வாய்ப்பு உள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ். விசேட நிருபர்
வடக்கு, கிழக்கில் தாழமுக்கம்;
புயலாக மாறலாம் என எச்சரிக்கை
118
previous post