பாணந்துறை, ஹொரேதுடுவை முஸ்லிம் வித்தியாலயம் ஏற்பாடு செய்த “ஆரோக்கியமான சூழல் அர்த்தமுள்ள வாழ்க்கை”
செயற்திட்டத்தின் முக்கிய அங்கமாகவுள்ள போதைப் பொருட்களை தவிர்ப்போம் என்ற தொனிப்பொருளில் அமைந்த கண்காட்சி, வீதி நாடகம், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கெளரவிப்பு என்பன அதிபர் எஸ்.எச்.முத்தலிப் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாணந்துறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டப்லியூ. எம். சமந்த வெதகே கலந்து சிறப்பித்தார். ஹொரேதுடுவை வித்தியாலய பழைய மாணவரும் தொழிலதிபருமான ஷியாம் நளீம் கெளரவ அதிதியாக கலந்துகொண்டதுடன், பாடசாலையின் பழைய மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றார்கள், அபிமானிகள், ஊர்மக்கள் என பெருந்திரளானவர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். பாடசாலைக்கு பலவழிகளிலும் ஊடகத்துறைக்கு பங்களிப்பு செய்த சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் இதில் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். தினகரன் பத்திரிகை சார்பில் கலாபூசணம் எம்.கே.எம். அஸ்வர், அஷ்ரப் ஏ.சமத் மற்றும் கலாபூஷணம் ஏ.எல்.எம்.சத்தார், கலாபூஷணம் ஏ.எல்.எம். அஸ்வர், ஏ.எம்.மொஹம்மத் ரலீன் ஆகிய ஊடகவியலாளர்கள் இதில் கெளரவிக்கப்பட்டனர்.
(எம்.கே.எம்.அஸ்வர் – மொறட்டுவை மத்திய விசேட நிருபர்)