சிக்னேச்சர், இலங்கையில் தயாரிக்கப்படும் முன்னணி ஆடவர் ஆடை வர்த்தக நாமமான சிக்னேச்சர், தனது 10வது காட்சியறையை ஹெவ்லொக் சிட்டிமோலில் திறந்து வைத்தது.
புதிய கிளை பிரபல இசைக்கலைஞர் சங்க தினேத், பிரபல சமையற்காரர் சரித் என் சில்வா (வைல்ட் குக்புக்) மற்றும் பிரபல கலைஞர் மாதவ விஜேசிங்க ஆகியோரால் பல சிக்னேச்சர் ஊழியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. ஆரம்ப நாளில், புதிய சிக்னேச்சர் ஷோரூம் கடை முழுவதும் தாராளமாக 20% தள்ளுபடியுடன் ஷொப்பிங் செய்பவர்களை மகிழ்வித்தது, இது ஃபேஷன் ஆர்வலர்களுக்கு தவிர்க்க முடியாத இடமாக அமைந்தது.
ஹெவ்லொக் சிட்டி மோலின் 02ஆம் நிலை எண். 4இல் அமைந்துள்ள இந்த காட்சிறை இணையற்ற வசதியையும் விசாலமான வசதிகளையும் வழங்குகிறது. முறையான, சம்பிரதாயமான, ஸ்மார்ட் கேஷுவல், சாதாரண, கைத்தறி, பார்ட்டி உடைகள், சூட்கள், சட்டைகள், பிளேசர்கள் மற்றும் கால்சட்டைகள் ஆகியவற்றின் விரிவான தொகுப்புடன், வாடிக்கையாளர்கள் சமீபத்திய போக்குகளுக்கேற்ப மற்றும் உயர்தர தயாரிப்புகள் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் வழங்குகின்றது. சிக்னேச்சரின் அர்ப்பணிப்பு வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தோற்றத்தை பூரணமாக்க உதவுவதோடு பரந்த அளவிலான தோல் தயாரிப்புகள் மற்றும் ஆண்களுக்கான அணிகலன்கள் வரை அதன் உற்பத்தி வரிசை விரிவாக்கப்பட்டுள்ளது,