விருந்தோம்பல் துறையில் நாளையை தலைவர்களை நிலைநிறுத்தச் செய்யும் குறிக்கோளுடன் அவர்களின் திறன்கள் மற்றும் திறமைகளை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கையின் இளைஞர்களை ஊக்குவித்து அவர்களை வலுவூட்டும் நோக்குடன், ஏ.பவர் அன்ட் கம்பனி பிரைவட் லிமிடெட் நிறுவனத்தின் சுவிஸ் ஹோட்டல் மனேஜ்மன்ட் அகடமி பிரைவட் லிமிடெட் (SHMA), இலங்கை தேசிய இளைஞர் படையணியுடன் (NYC) புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் அண்மையில் கைச்சாத்திட்டது.
விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை தேசிய இளைஞர் படையணி, நிலைபேறான வளர்ச்சிக்கான திறன்கள் (SSG) செயற்திட்டத்தின் பயிற்றுவிக்கும் பங்காளராக இயங்கும். இந்த செயற்திட்டம், பவர் மற்றும் அபிவிருத்தி மற்றும் ஒன்றிணைவுக்கான சுவிஸ் முகவர் (SDC) அமைப்பு, சுவிட்ஸர்லாந்தின் வெளி விவகார செயற்பாடுகளுக்கான சர்வதேச ஒன்றிணைவுக்கான பெடரல் திணைக்களம் ஆகியவற்றுக்கிடையிலான அரச மற்றும் தனியார் துறை பங்காண்மையாக அமைந்துள்ளது.
2002 ஆம் ஆண்டு முதல் இளைஞர் அபிவிருத்திக்காக அர்ப்பணிக்கப்பட்ட அரச ஸ்தாபனமாக NYC திகழ்வதுடன், நாடு முழுவதிலும் 58 பயிற்சி நிலையங்களைக் கொண்டுள்ளது. தனது பிரத்தியேகமான பயிற்சி மாதிரிகளினூடாக இளைஞர்களை ஊக்குவித்து, வழிநடத்தி, தயார்ப்படுத்தி அவர்களுக்கு அவசியமான மென் திறன், கல்விசார், தொழிற்பயிற்சி, பொழுதுபோக்கு மற்றும் சமூக அடிப்படையிலான பயிற்சிகளை வழங்குகின்றது.