இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனத் துறையில் செயல்படும் ஒரு முன்னணி உலகளாவிய வாகன உற்பத்தியாளரான TVS Motor Company, ஐரோப்பிய சந்தையில் நுழைவதாக அண்மையில் அறிவித்துள்ளது. 100 ஆண்டு பழமைவாய்ந்த நிறுவனம் மற்றும் வாகன விநியோகத்தில் முன்னணி பெயர் என்று கருதப்படும் Emil Frey உடன் இறக்குமதி மற்றும் விநியோக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
Emil Freyஇன் விரிவான விநியோக வலையமைப்பு மற்றும் ஐரோப்பாவில் ஆழமான சந்தை நுண்ணறிவு ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் TVS Motor Companyற்கான உலகளாவிய விரிவாக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியை இந்தக் கூட்டாண்மை குறிக்கிறது.
புத்தாக்கம் மற்றும் தரத்திற்கான அர்ப்பணிப்புக்காக அறியப்பட்ட TVS Morot Company, ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு உயர் செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இரு சக்கர வாகனங்களை வழங்க உள்ளது.
TVS Motor Companyயும் Emil Frey பொறுப்புமிக்க மற்றும் நிலையான போக்குவரத்துக்கு அர்ப்பணித்துள்ளன, மேலும் சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் திருப்தியை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றன.