நாட்டின் நுகர்வோர் இலத்திரனியல் மற்றும் உபகரணத் துறையின் நம்பக நாமமான சிங்கர், உலகப் புகழ்பெற்ற Honor வர்த்தக நாமத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. நீண்டகால கூட்டாண்மையின் கீழ், நாட்டில் Honorரின் ஒரே விநியோகஸ்தர் சிங்கர் ஆகும். Honor கையடக்கத்தொலைப்பேசி; மாதிரிகளுடன், இலங்கையில் உள்ள நுகர்வோருக்கு உயர்தர ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் துணைப்பாகங்களை போட்டி விலையில் வழங்குவதையே இக் கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிங்கர் ஸ்ரீலங்கா பீ.எல்.சி யின் பிரதம நிறைவேற்று அதிகாரி . மகேஷ் விஜேவர்தன கூறுகையில், “Honor உடன் கைகோர்த்து எமது வாடிக்கையாளர்களுக்கு இவ்வர்த்தக நாமத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம். இவ் Honor குறிப்பெயரின் அதி நவீன அம்சங்கள் மற்றும் மலிவு விலைகள் இலங்கை நுகர்வோருக்கு தனித்துவமான மொபைல் அனுபவத்தை வழங்கும் என்பதை நாம் நன்கு அறிவோம். Honor ஆனது இலங்கை சந்தையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திடும் என்பது உறுதி” என கருத்து தெரிவித்திருந்தார்.
சீனாவின் முதல் தர ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக Honor, உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் பெருமளவில் அறியப்பட்டதோடு, உலகில் வேகமாக வளர்ந்து வரும் கையடக்கத்தொலைபேசி நாமங்களில் ஒன்றாகும். Honor சிறப்பியல்புகளாவன புதுமைத்துவம் மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கான அதன் புதிய அம்சங்கள் மற்றும் ஒப்பற்ற கெமரா தரம், பேட்டரி ஆயுள் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறனுடன் முதன்மை பெற்றுள்ளது.