இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ் தனது ‘Go Green’ செயற்பாடுகளினூடாக, நிலைபேறாண்மை மற்றும் சூழல் பொறுப்புணர்வுச் செயற்பாடுகள் பற்றி தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகின்றது.
இந்த பசுமையான செயற்பாடுகள் தொடர்பில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மேலும் விஸ்தரிக்கும் வகையில், தொழிற்துறையின் சூழல் தாக்கத்தை தணிப்பதற்காகவும், நிலைபேறான செயன்முறைகளை ஊக்குவிப்பதற்காகவும் பரந்தளவு சூழல் பாதுகாப்பு முயற்சிகளுக்கு பங்களிப்பு வழங்குவதற்காகவும் காப்புறுதி சான்றிதழுடன் e-காப்புறுதி ஆவணத்தையும் அறிமுகம் செய்துள்ளது.
காப்புறுதிதாரரின் ஆயுள் காப்புறுதித் திட்டம் தொடர்பான பிரதான தகவல்கள் மற்றும் அனுகூலத்தின் சாராம்சங்கள் ஆகியவற்றை காப்புறுதி சான்றிதழ் கொண்டிருக்கும். காப்புறுதி சான்றிதழுடன், காப்புறுதிதாரர்களுக்கு e-காப்புறுதி ஆவணங்களை பல்வேறு தெரிவுகளினூடாக மாற்றிக் கொள்வதற்கான அணுகும் வசதி வழங்கப்படும். காப்புறுதிதாரர்களுக்கு தமது பதிவு செய்து கொண்டுள்ள மொபைல் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும் SMS link இனூடாக, QR குறியீட்டை ஸ்கான் செய்வதனூடாக மற்றும் Clicklife App இனூடாக காப்புறுதி ஆவணத்தை பார்வையிட அல்லது தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதனூடாக பாவனையாளருக்கு நட்பான மொபைல் செம்மைப்படுத்தப்பட்ட வசதி வழங்கப்படுகின்றது.
இந்தத் திட்டம் தொடர்பாக யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் அஷ்யூரன்ஸில் புத்தாக்கம், முன்னேற்றம் மற்றும் ESG பெறுமதிகளை பேணுதல் ஆகியவற்றில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.