மஹிந்த ராஜபக்ஷ ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வாழ்க்கையை ஆரம்பித்தது 24 வயதிலாகும். நவம்பர் 18ம் திகதி தனது பிறந்த தினத்தைக் கொண்டாடும் மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தது தனது தந்தையான டீ. ஏ. ராஜபக்ஷவுடனாகும்.
நாம் இந்தக் கட்டுரையில் மஹிந்த ராஜபக்ஷவின் வரலாற்றுக் குறிப்புக்களை நினைவூட்டுகிறோம். சமீபத்திய வரலாறு பலருக்கு புதிதல்ல. எனினும் புதிய தலைமுறையினர் அதை அறிந்து கொள்வது அவசியம் என்பதால் வரலாற்று நினைவுகளை நினைவுபடுத்துகிறோம்.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு 1972ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட போது அந்தப் பிரேரணை தொடர்பான ஆரம்ப யோசனையை 1970 ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது மஹிந்த ராஜபக்ஷவாகும். தற்போதைய பாராளுமன்றத்தின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவரும் அவரேயாகும். 1970ம் ஆண்டு தேர்தலில் பெலியத்தையிலிருந்து அவருக்கு ஆச்சரியமிக்க ஒத்துழைப்பு கிடைத்தது. அதனை 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுடன் மாத்திரமே சமப்படுத்த முடியும்.
விஷேடமாக அவர் ஒரு இளைஞராக இருந்ததும், தந்தையின் வழியிலான அரசியல் வாழ்வும் அதற்கு காரணமாக அமைந்தன. 1970ஆம் ஆண்டில் 80 வீதமான சிறியளவிலான பிரசாரக் கூட்டங்களே நடைபெற்றன. எல்லா கூட்டங்களிலும் சுமார் 250 பேரளவில் கலந்து கொண்டிருந்தனர். பெரியவர்கள் அவரை மஹிந்த மஹத்தயா என்றே அழைத்தார்கள். இளைஞர்களுக்கு அவர் அண்ணன் அல்லது தம்பியாக இருந்தார். எல்லா கூட்டங்களின் மேசைகளிலும் குளிர்பான போத்தல்களும், சிறிய கேக் துண்டுகளும் இருந்தன. கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரே அவர் ஏற்பாட்டாளர்களுடன் சேர்ந்து அவற்றை ருசி பார்த்துவிடுவார்.
மஹிந்த ராஜபக்ச 1989ம் ஆண்டு பொதுத் தேர்தலை எதிர்கொண்டது அவரது அரசியல் வாழ்க்கையின் இரண்டாவது பயணமாக இருந்தது. 1977 பொதுத் தேர்தலுக்கு 12 வருடங்களுக்குப் பின்னர் 1989 இல் அவர் மீண்டும் பாராளுமன்றத்திற்குத் திரும்பினார்.
மஹிந்த ராஜபக்ஷவின் அனைத்து வெற்றிகளுக்கும் அவரது வீட்டில் விவாதம் நடந்தது என்பதில் சந்தேகமில்லை. இதில் கலந்து கொண்டவர்கள் கலாநிதி வில்லி கமகே, கே. எச். அது. கொடவத்த, டி. ஜயசிங்க, தர்மன் விக்கிரமரத்ன, எஸ். சஹபந்து, அமரசிங்க குடகலர, ஜஸ்டின் திஸாநாயக்க, சமல், மஹிந்த மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் மகிந்த ராஜபக்சவின் அரசியல் வாழ்வின் விசேட அம்சம் என்னவென்றால், எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையிலும் அவர் தைரியமிழக்காததாகும். தடைகளைக் கண்டு மனம் தளர்ந்து போகமாட்டார்.
பகவத் கீதையில் குறிப்பிட்டுள்ளபடி, அவர் செயற்பட்டது அதனால் கிடைக்கும் பெறுபேற்றை எதிர்பார்த்து அல்ல. அவர் தன்னைப் புரிந்து கொண்டார்; தனது எதிரியையும் புரிந்து கொண்டார். ஆயிரம் போராட்டங்களைச் செய்து ஆயிரம் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டார். என்றாலும் நண்பர்கள் வேடத்திலிருந்த எதிரிகளை இனங்கண்டு கொள்ள முடியாமல் போனது.
இலங்கையின் வளங்கள் ஏராளமாக உள்ளது என்பதையும், மக்கள் புத்திசாலிகள் என்பதும் மகிந்தவின் நோக்காக இருந்தது. மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக அரச சேவை விரிவுபடுத்தப்பட்டது.
நாட்டின் அபிவிருத்திக்கு அனைத்து துறைகளையும் மஹிந்த இணைத்துக் கொண்டார். ஹத்மாலு, மாத்தறையில் அம்புல்தியல், புத்தளத்தில் கத்தரிக்காய் மோஜூ, யாழ்ப்பாணத்தில் ஆட்டிறைச்சி வறுவல், கெக்கிராவவில் குரக்கன் மா என பலவேறு வகையான உணவுத் தேர்வுடையவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக ஆகினர். முப்பது வருட யுத்தத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார். என்றாலும் தமிழ் பிரிவினைவாதிகளும் அவர்களின் கைக்கூலிகளும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் அவர்களின் அடிவருடிகளும் அதை விரும்பவில்லை. மஹிந்த தன் வாழ்நாளிலேயே தனது மகத்துவத்தைப் பெற்றுக் கொண்டார். இருள் என்பது விடியலின் ஒரு பகுதியாகும். இரவைக் கடக்காமல் எவராலும் விடியலை நோக்கி பயணிக்க முடியாது. சூரியன் மேற்கில் மறைவது உண்மைதான். ஆனால் அது கிழக்கிலிருந்து நாளை காலை மீண்டும் எழும்.
மஹிந்த தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராகும். அத்துடன் எந்த ஒரு சவாலுக்கும் தைரியமாக முகங்கொடுப்பவராகும். நன்றிக்கு சிறந்த உதாரணமாக இருப்பதும் மஹிந்த போன்றவர்களாகும்.
உலகின் முக்கிய தலைவர்கள் இரண்டு தரப்பினராகும். அதில் ஒரு வகையினர் தாம் முன்னெடுத்துச் சென்ற பணிகளிலிருந்து நீங்கிய பின்னரும் பின்தொடர்பவர்களால் அவற்றைச் செய்பவர்களாகும். சிங்கப்பூரின் லீ குவான் யூ, தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா, மலேசியாவின் மஹதீர் முகம்மது, மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோரும் அந்த தரப்பினைச் சேர்ந்தவர்களாகும். கொழும்பு துறைமுக நகரத் திட்டம், கண்டி அதிவேக நெடுஞ்சாலை, கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி என மஹிந்தவின் அனைத்துத் திட்டங்களும் இன்றும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
தர்மன் விக்ரமரத்ன தமிழில் - எம். எஸ். முஸப்பிர்